♥மனைவியை அடிக்கடி முத்தமிடுங்கள், அது உறவுக்கு அவசியம்..
♥பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப்படுகிறது.
அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் படுக்கையறையின் மகிழ்ச்சியிருக்கும்.
♥மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிரப் பேசுவது, மோசமாக நடந்துகொள்வது ஆகியவை அவளை பாதிக்கும். அன்பும் நெருக்கமும் இருவருக்கும் இடையில் இருந்தால்தான் உடல் உறவும் இன்பமாக இருக்கும்.
♥வேலையிலிருந்து திரும்பும் கணவன், மனைவிக்கு வாங்கிவரும் பரிசுப்பொருட்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த மகிழ்ச்சி உறவை இரட்டிப்பாக்கும்.
♥பல பெண்கள், “என் கணவர் படுக்கையறையைத் தவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை தொடுவதில்லை என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு வெறும் காமத்தை பின்னணியாகக் கொண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது,கைகளைப் பற்றிக்கொள்வது,முத்தமிடுதல் ஆகியவை மிக பிடித்தமான முக்கியமானவையாகும்.
♥எனவே எப்பொழுதெல்லாம் உங்கள் மனைவி விரும்புகிறாரோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்களேன். உங்கள் மீதான காதலும் பாசமும் அதிகரிக்கும்.
♥உங்களின் உறவு இனிமையாக மாற,மனம் திறந்து பேசுங்கள். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். இதமான, உணர்வுப் பூர்வமான விஷயங்கள் மகிழ்ச்சியைப் பல மடங்காக்கும்.
♥உங்கள் மனைவி, உங்களைத் தழுவி இதமாக,கழுத்து, தலையை வருடிவிடுவது உங்களின் இதயத்தை எப்படித் துள்ள வைக்கிறது! அதுபோலத்தான் உங்களின் நெருக்கமும் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.
♥ஆனால் உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாகும்
0 Comments
Thank you