HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அப்பா

♥#அப்பா 

♥1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால்  மாதா.. பிதா... என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.

♥2. மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை.

♥3. குழந்தைகளின் வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக  எப்படிபட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா.

♥4. மகன், மகள் இன்றையத் தேவைகளைவிட வருங்காலத் 
தேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு அதற்காகத் தன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித உள்ளம் படைத்தவர்.

♥5. மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர்.

♥6. தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று  பணி புரிந்து சம்பாதித்து பணம் அனுப்பி, மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின் கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களை
சகித்துக் கொள்ளும் தன்னலமற்றவர்.

♥7. மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும் வரை ATM ஆக இருப்பவர்...

♥8. கடைசி காலத்தில் பிள்ளைகளால் (எல்லா பிள்ளைகளும் அல்ல) துரத்தப்பட்டாலும் அவர்களின் நல்வாழ்விற்கு ஆசைப்படுபவர்.

Post a Comment

0 Comments