HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்களுக்கு: #அச்சம். #மடம். #நாணம். #பயிர்ப்பு

#ஆண்களுக்கு:
 #அறிவு. #நிறை. #ஓர்ப்பு .#கடைப்பிடி
#பெண்களுக்கு: 
#அச்சம். #மடம். #நாணம். #பயிர்ப்பு 

♥#நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் என்பவை ஆண்,பெண் இருபாலாருக்கும், அவரவர் இயல்புகளுக்கு ஏற்ப இயற்பண்புகளாய் அமைந்திருக்க வேண்டிய பண்புகளாக மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட பண்புகளாகும்.

♥ஆண்களுக்குரிய நாற்பண்புகள் 
அறிவு 
அறிவு என்பது எந்தப் பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அந்த உண்மைத் தன்மையை உணர்வது அறிவு ஆகும்.

♥நிறை 
நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை என்று பொருள்.

♥ஓர்ப்பு 
ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பதாகும்

♥கடைப்பிடி 
கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை என்று விளக்குகிறது. அதாவது “நன்றென அறிந்த பொருளை மறவாமை”; ஆத்திசூடியும் “நன்மை கடைப்பிடி” என்கிறது.

♥#பெண்களுக்குரிய_நாற்பண்புகள்
பெண்களுக்குரியதென மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட அகப்பண்புகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளாகும். முற்போக்குச் சிந்தனைவாதிகளும் பெண்ணிலைச் சிந்தனையாளர்களும் நாற்பண்புகள் குறித்த விபரிப்புகளை அடக்குமுறையின் வடிவம் என மறுதலித்து வருகிறார்கள்.

♥அச்சம் 
அச்சம் என்பது வரவிருக்கும் அபாயம் மற்றும் அவப்பெயர் குறித்து ஏற்படும் மன நடுக்கம் எனப் பொருள்படும். பெண்களுக்கு வீரம் வரவே கூடாது அவர்கள் அச்சப்பட்டே வாழவேண்டும்.

♥மடம் 
மடம் இது மடமை எனவும் கூறப்படும். அறிந்தவொரு விடயத்தைக் கூட அறியாதவர் போல சபையில் எடுத்துக்கூறாதத் தன்மை என இது விளக்கப்படுகிறது. யாராவது தவறாக கூறினாலும் நாம் வாயை மூடி இருக்கவேண்டும். பெண்களுக்கு அறிவு வரக்கூடாது.

♥நாணம் 
நாணம் என்பது வெட்கப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும். கோபப்படக்கூடாது மாறாக வெட்கம் மட்டுமே பெண்களுக்கு சொந்தம்

♥பயிர்ப்பு 
பயிர்ப்பு என்றால் அசுத்தம், குற்சிதம் என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதியிலிருந்து பொருள் கூறப்பட்டுள்ளது. குற்சிதம் என்றால் அசுத்தம் - அருவருப்பு என்று பொருள் மதுரைத் தமிழ்ப் பேரகராதியிலிருந்து கூறப்பட்டுள்ளது. 

♥ஒரு பெண்ணென்றால் அசுத்தம், அருவருப்பாகப் பார்ப்பதற்கு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே, இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று பெண்ணிய மற்றும் பெரியாரியச் சிந்தைனையாளர்கள் இந்த விளக்கத்தை எதிர்க்கின்றனர்

♥அன்று பெண்களை அடக்கி வைக்க உருவாக்கப்பட்ட அச்சம் மடம் நாணம் பயிர்ப்பை இன்று விபரம் தெரியாமலே பல பெண்களும் கொண்டாடி வருவதுதான் வேதனை.

♥இதற்காகத்தான் பின்னர் அச்சம் தவிர் என புரட்சிக்கவிஞன் பாடிச்சென்றான்.

♥ஆண்களுக்கு அறிவு பெண்களுக்க மடம்.. எவ்வளவு மோசமான ஒரு அடக்குமுறை இது...

Post a Comment

0 Comments