#பிரியமான #தோழி
பக்கத்து ஊர் பொண்ணு
படிக்கும் போதே பழக்கம்
இடம்பெயர்வு பிரச்சினையால
இடையில கொஞ்சம் தொடர்பில்ல.
பிறகு எப்பிடியோ
பேஷ்புக்கில தேடி கண்டுபிடிச்சு கதைக்க ஆரம்பிச்சம்.
அவையிட அப்பாவும் அந்த இந்த தொழில் எண்டு அம்பிடுறத செய்தார்.
ஆனாலும் கஸ்டம் தான்.
அதுக்காக நானொன்றும்
அம்பானி போல இல்ல.
இன்பதுன்பம் எல்லாம் நாம்
இருவரும் பகிர்ந்து கொள்வம்.
அடுத்தவருக்கு ஆறுதல் சொல்வதிலை நான் அப்பவே முதலிடம்..அதனால
கவலைகள் சொன்னாள்
கரிசனை கொண்டேன்.
கண்ணீர் விட்டாள்
கைகளால் துடைத்து விட்டேன்.
கஸ்ரம் என்றாள்
கேளாமலே உதவிகள் செய்தேன்.
பல்கலை சென்றாள்
படிப்பதற்கு உதவினேன்.
நன்பிகள் யாரும் என்னுடன் நெருங்காமல்
நாசுக்காய் நறுக்கிவிட்டாள்.
அன்பினால் தானே அதுவென்று நினைத்தேன்.
ஆயுள்வரை நம் உறவு தொடருமா என்றேன்
அதிலென்ன சந்தேகம் என்றாள்.
ஒரு பொழுதும் நாம் பிரியக்கூடாது என்றாள்.
ஓம் என்றேன்.
நாம் பிரிந்தால்....
சூரியன் மரிக்கும்
சுழலும் பூமி நின்று போகும் என்றாள்
அழகான கவிதையென்று ஆனந்தப்பட்டேன்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பொன்று வர வீணாக்க முடியவில்லை.
விரைவில் உன்னை கைபிடிப்பேன் வீண்கலக்கம் வேணாம் கண்ணேயென்று
சத்தியம் செய்து...
குடியுரிமை கிடைத்ததுமே
குடும்பமாய் நாம் குடியேறலாம் என்று சமரசம் சொல்லி பிரியமனமின்றி வந்தேன்
இணையத்தில் இரவிரவாய் கதைபேசி இடையிடையே அவளுக்கு படிப்புக்கேற்ப வேலை தேடி..
இப்படியே போனது என்இரவுகள்
ஓட பைக்கும் ஒரு லப்ரப்பும் கேட்டாள்.
உரிமையாக கேட்பதாக எண்ணி உதறித்தள்ள முடியவில்லை.
யூனி முடிய அரசு வேலைகிடைத்தது
எனக்கு விசாவும் கிடைத்தது.
கதைக்கும் நேரம் சற்று களவுபோயிருந்தது. வேலைப்பளுவென்று
விளக்கவும் சொன்னாள்.
தொலைபேசி அழைப்புக்கள் இப்போது துண்டிக்கப்படுகிறது.
குறுந்தகவல்களுக்கு கூட
குறும் பதில்கள் ஓரிரண்டு.
இறுதியாய் கேட்கிறேன் சொல்
என்ன நடந்தது என்றேன்.
தொல்லை பண்ணி தொலைக்காதடா என் நிம்மதியை கெடுக்காதடா என்றாள்.
தோழி ஒருத்திக்கு தொலைபேசிசெய்து என்ன பிரச்சினை ஏதாவது உதவி செய் என்றேன்.
வேலை செய்யும் இடத்தில்
விரும்பி யாரோ கேட்டதாம். இப்ப
கலப்பும் முடிஞ்சு
கல்யாணம் தைக்காம் என்றாள்....
0 Comments
Thank you