♥டிவி' தொடர், பார்ப்பவரா நீங்கள்?
அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகும், 'டிவி' தொடர்கள், சமுதாயத்தின் அனைத்து வயதினரையும் சீரழித்து வருவதைப் பற்றி, பலரும் புலம்பி வருகின்றனர்.
அடுத்தவன் குடும்பத்தை எப்படி கெடுப்பது, அயலான் மனைவியை எப்படி அடைவது, அப்பாவிகள் மீது எப்படி பழி சுமத்துவது போன்ற, பஞ்சமா பாதகங்களையும், 'டிவி' தொடர்களில் காட்டுகின்றனர்.
♥மேலும், 'ரேட்டிங்'கை அதிகரிக்க, மக்களின் மனங்களில், எதிர்மறை எண்ணங்களை விதைத்து சம்பாதிக்கின்றனர்.
இது ஒருவகை என்றால், குடிக்காரனைக் கூட திருத்தி விடலாம், 'டிவி' தொடர் பார்க்கும் அடிமைகளை திருத்தவே முடியாதது, இன்னொரு வகை. என் மனைவியும், 'டிவி' தொடர் பார்க்கும் அடிமைகளில் ஒருவராக இருந்தாள்.
காலையும், மதியமும் அவளுடைய ரத்த அழுத்தத்தை, கருவி மூலம், வீட்டிலேயே சோதனை செய்தேன். அடுத்து, மாலையில், என் மனைவி, 'டிவி' தொடர் பார்க்கும் போது, ரத்த அழுத்தத்தை சோதித்தேன். 'கன்னா பின்னா' என்று எகிறி இருந்தது.
♥'சர்க்கரை நோயாளியாகிய, உனக்கு, 'டிவி' தொடர்களால், ரத்த அழுத்தம், ஏறி இறங்கி, உயிருக்கே ஆபத்து ஆகிவிடும்...' என்று, அறிவுரை கூறினேன். இப்போது, 'டிவி' தொடர் பார்ப்பது குறைந்துள்ளது. விரைவில், முழுவதுமாக அதிலிருந்து மீண்டு விடுவாள் என்று நம்புகிறேன்.
'டிவி' தொடர் பார்க்கும் பழக்கமுள்ளவர்கள், சிறிது சிறிதாக அதிலிருந்து விடுபட்டு, உடல்நலத்தை காப்பாற்றி கொள்ளுங்களேன்!
0 Comments
Thank you