♥90' களை மறக்க முடியுமா?
♥வீட்டுக்கு வீடு வானொலிப்பெட்டி வைத்திருந்த கடைசி தலைமுறை.
♥வீட்டுக்கு தெரியாமல் ஆறு, ஏரிகளில் குளித்து பூவரசம் தடியால் வெறும் மேலில் அடிவாங்கிவிட்டு, தழும்புகளுடன் பாடசாலைக்கு சென்ற கடைசி தலைமுறை.
♥உண்டியலில் சில்லறை சேர்த்து, உடைத்துக் கொட்டி தேவையானபோது எடுத்துச் செலவு செய்த கடைசி தலைமுறை.
♥வேலிக்கு மேலாக பறக்கும் சேவலை துரத்திப்பிடித்த கடைசி தலைமுறை.
♥சிறுவயதில் சைக்கிள் ஓட்ட பழகும்போது பிரேக் பிடிக்க மறந்துவிட்டு மரத்தில் மோதிய கடைசி தலைமுறை.
♥மாட்டு வண்டியில் சவாரி செய்த கடைசி தலைமுறை.
♥பிலிம் ரோலில் படம் எடுத்து முடிக்கும்வரை காத்திருந்து, பிரதி எடுத்தபின் பார்த்து மகிழ்ந்த கடைசி தலைமுறை.
♥ஒரு மணி நேரத்திற்கு 2 ரூபாய் கொடுத்து சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த கடைசி தலைமுறை.
♥அம்பாசிடர் காரை பார்த்த கடைசி தலைமுறை.
♥பெட்டிக் கடைகளில் 25 பைசாவிற்கு 3 துண்டு சினிமா பிலிம்களை வாங்கி சேகரித்து, கூட்டாளிகளுக்கு சூரிய ஒளியில் படம் காட்ட பயாஸ்கோப் தயாரித்த கடைசி தலைமுறை.
♥நொண்டி, கபடி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாமூச்சி, கோலி போன்ற பலவிதமான விளையாட்டுகளை விளையாடிய கடைசி தலைமுறை.
0 Comments
Thank you