♥90களில் பிறந்தவர்கள் :
♥பக்கத்து வீட்டில் யார் யார் இருந்தார்கள்? என்பதை தெரிந்து வைத்தவர்கள்.
♥அனைவரும் ஒன்றாக 'ஒளியும் ஒலியும்" பார்த்த கடைசி தலைமுறை.
♥கூட்டுக் குடும்ப வாழ்க்கையை நன்றாக உணர்ந்தவர்கள் இவர்கள்.
♥அனைத்து திருவிழாக்களையும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்தார்கள்.
♥பெரும்பாலான பெண் பிள்ளைகளின் உடை தாவணியாகவே இருந்தது.
♥வீட்டிற்குள்ளேயே முடங்காமல் வெளி உலகத்தை ரசித்தார்கள்.
♥லீவ் நாட்களை புதுப்புது விளையாட்டுக்களில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கழித்தார்கள்.
♥காதல் கடிதங்கள் அனுப்பிக் கொண்ட கடைசி தலைமுறையினர்.
♥விடுமுறை நாட்களில் பெரும்பாலும் நண்பர்களுடனேயே கழித்தார்கள்.
♥ஒரு ரூபாயில் வேண்டிய தின்பண்டங்களை வாங்க முடிந்தது.
♥படுத்தவுடன் தூக்கம் வரும் அளவிற்கு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.
♥பெண்பிள்ளைகள் ரெட்டைச் சடையில் அழகாக காட்சியளித்தார்கள்.
♥நியூஸ் வருவதற்கு முன்பு, ஓடும் கவுண்ட் டவுன் டைமை வைத்து வாட்ச்சை செட் செய்தவர்கள்.
♥நாட்டு நடப்புகளை நாளிதழ்களில் பார்த்து தெரிந்து கொண்டனர்.
♥நண்பர்களுடன் அமர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிட்டவர்கள்.
♥பீட்சாவுக்கும், பர்க்கருக்கும் காத்திருக்காமல், பசித்தால் பழைய சோற்றை சாப்பிட்டவர்கள்.
♥காசை பத்திரப்படுத்த உண்டியலை பயன்படுத்தியவர்கள்.
♥கடைகளுக்கு பெரும்பாலும் நடந்தே செல்வர். வாகனங்களை அதிகம் பயன்படுத்தியது கிடையாது.
♥பம்பு செட்டிலும், குளத்திலும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடியவர்கள்.
♥தாத்தா, பாட்டியுடன் அதிக நேரத்தை செலவு செய்தவர்கள்.
0 Comments
Thank you