♥திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என
முடிவுக்கு வந்த சுனிதாவும் சுந்தரும் ஏனோதானோவென
வாழ்ந்து இப்போது ஆறு வருடம் கழித்து விவாகரத்து
தீர்ப்பிற்காய் மகள் தீபாவோடு கோர்ட்டில் காத்திருந்தனர்.
♥குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற
பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட
குழம்பிப்போன நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை
கேட்டார்.
♥அங்கிள் ரெண்டு பேருமே ஏன் பிரியறாங்க..? என்ற
எதிர்பாராத தீபாவின் கேள்வியில் ஆடிப்போனார் நீதிபதி.
♥அது… வந்து… அம்மா பேசறது அப்பாவிற்கும் அப்பா
பேசறது அம்மாவுக்கும் புரியலையாம். அதான் பாப்பா
அவங்க பிரியறாங்க… என சமாளித்தார்.
♥அங்கிள் ரெண்டு பேருமே பெரியவங்க. அவங்க பேசறதே
அவங்களுக்கு புரியலைன்னா, நான் இன்னும் சின்னப்
பொண்ணு.
♥நான் பேசறதை அவங்களால எப்படி புரிஞ்சுக்க
முடியும்? அதனால என் பேச்சை கேட்டு, புரிஞ்சு எனக்கு
எல்லாம் செய்யற வேலைக்காரப் பாட்டி வீட்டிற்கே
போயிடறேன்.
♥என்ற தீபாவின் பேச்சைக் கேட்ட
நீதிபதியின் பேனா தானாகவே உடைந்தது.
0 Comments
Thank you