♥தனக்கு பிடித்த ஆணிடமிருந்து பெண் எதிர்பார்ப்பது என்ன……. ஆண்களைபோல் வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள்.
♥அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
♥நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்.
♥பேசிக்கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும்.
♥இது ஒரு அருமையான அனுபவமும் கூட.
நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.
♥சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும்.
இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.
♥அதே போல ஒரு ஆணை நேசிக்க தொடங்கி விட்டால் அவனின் புறத்தோற்றம் பற்றி கவலை படுவதும் இல்லை என்பது நிதர்சன உண்மை.
♥இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.
♥உன் அழகு உருவத்தில் இல்லை,
மனதில்தான் இருக்கிறது,
உனது பேச்சுதான் உனக்கு அழகு,
உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.
♥அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்
0 Comments
Thank you