♥டேய் விமலு...உங்கம்மா ராப்பகலா வேலை செஞ்சு,
கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உன்னைப் படிக்க வச்சது
வீண்போகலை. பார்...ஒரே சமயத்துல ரெண்டு
உத்தியோகம் தேடி வந்திருக்கு.
♥தீயணைப்புத் துறையில
ஃபயர்மேன் வேலை. காவல் துறையில் சப் இன்ஸ்பெகடர்
வேலை...
போடா போய் போலீஸ் வேலையில் ஜாயின் பண்ணு''
மாமா சொன்னதும் தயங்கினான் விமல்.
-
♥‘’மாமா...நான் ஃபயர்மேன் வேலைக்கே போறேனே..!''
-
♥''அட முட்டாப் பயலே...சம்பளத்தைக் கவினடா!
சப் இன்ஸ்பெக்டருக்கு ஃபயர்மேனைவிட மூணு பங்கு
சம்பளம் அதிகம்!
எவ்வளவு மரியாதை கிடைக்கும் தெரியுமா? நம்ம
உறவுக்காரங்கள்ல யாருக்கும் கிடைக்காத அதிகாரமான
பதவி.
♥நீ அந்த டிரஸ்ல ஜீப்ல ஏறி வந்தா ஊர்ல நமக்கு என்ன
மதிப்பு தெரியுமா? யோசிக்காம போயி அந்த வேலையில்
சேர்ந்துடு!'' என்றார் மாமா அதட்டலாக.
-
♥விமல் கண்கலங்கினான்.
''மாமா. சொற்ப சம்பளம்னாலும், தீ விபத்துல சிக்குற
எத்தனையோ உசிரைக் காப்பாதற ஃபயர்மேன்
வேலைதான் எனக்கு பிடிச்சிருக்கு.
♥காலமெல்லாம்
தீப்பெட்டி கம்பெனில எனக்காக உழைச்ச எங்கம்மா,
கடைசியா தீப்பெட்டித் தொழிற்சாலை விபத்துலயே
பொசுங்கிப் போனாங்க. அவங்க
ஆத்மாவும் இந்த வேலையைத்தான் விரும்பும் மாமா''
என்றான் குரல் தழுதழுக்க!
-
♥இப்போது மாமாவும் கலங்கினார்..!
0 Comments
Thank you