♥அன்பான பெண்களே... உங்கள் கணவர் மற்றும் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமா?
♥திருமணமாகி புகுந்த வீடு வந்ததுமே, கணவரின் பெற்றோரை, அன்பாய், அழகாய், உரிமையாய், அத்தை... மாமா...' என்று பாசமாய் அழைத்து பேசுங்கள்.
♥முடிந்தவரை சமையலை நீங்களே சமைத்து உங்கள் அழகிய வளைக்கரங்களாலேயே பரிமாறுங்கள். அவருக்கு சமையலில் என்னவெல்லாம் பிடிக்கும் என்பதை, முதலிலேயே மாமியாரிடம் கேட்டு, சமைத்து பரிமாற அவர் நெஞ்சில் எப்போதும் நீங்கா இடம் உங்களுக்கு தான்.
♥கணவர் மேல் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்த இதோ சில வழிகள்:
♥கணவர் வீடு திரும்பும் போது திருத்தமாய் உடையணிந்து கண்ணுக்கு லட்சணமாய் இருப்பது.
♥அவர் பேசும் போது அவரிடமிருந்து கண்களை விலக்காமல், கவனமாய் கேட்பது.
♥கணவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருந்தால், அதை தீர்க்க உதவி செய்வது.
♥இனிமையாக, எப்போதும் பாசிட்டிவாக பேசுவது.
♥நியாயமான கோபமே ஆனாலும், காட்டுக்கத்தல் கத்தாமல் பொறுமையாய் இருப்பது.
♥அன்பாக, அனுசரணையாக உபசரிக்கும் பாங்கு.
♥என்றும் நான் உன் இனிய தோழி என்பதை சின்ன, சின்ன விஷயங்கள் மூலம் புரிய வைப்பது.
♥அவர் வீட்டில் இருக்கிற தருணங்களில் சமையல் அறையே கதி என்று இருக்காமல், அவ்வப்போது அவரிடம் பேசி கொண்டே, சமையல் செய்வது.
#மாமியாரிடம்_நல்ல_பெயர்_எடுக்க...
♥மாமியார் என்றாலே எப்பவும், எதற்காகவும், குறை சொல்லிக் கொண்டே இருப்பார், எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார் என்று தயவு செய்து தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்காதீர்.
பொறுமையாய் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டு, அதன்படி நடங்கள்.
♥மாமியார் ஏதாவது அறிவுரை கூறினால், அவர்கள் குறை சொல்வதாக நினைக்காதீர்கள். தேவை ஏற்படும் போது மட்டுமே அவர்கள் அறிவுரை சொல்வர் என்று நம்புங்கள்.
♥எதற்கெடுத்தாலும் விவாதம் செய்யாமல், அவர் ஏதாவது கருத்து சொன்னால், உடனடியாக மறுத்து பேசாமல், சிறிது நேரம் கழித்து உங்கள் கருத்தை சொல்லி, ஆனா... நீங்க சொன்னா சரியாக தான் இருக்கும்' என்று இறுதியாக சொல்லி விடுங்கள்.
♥என்ன தான் அவசரமாக முடிவெடுத்து வெளியில் செல்ல நேர்ந்தாலும், உடனடியாக தொலைபேசியிலோ அல்லது நேரிலோ, அவரிடம், இன்ன இடத்திற்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு செல்லுங்கள்.
♥அத்தை, மாமா ஆகியோர் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிற்கு உங்கள் கைகளாலேயே செய்த இனிப்பு அல்லது அவர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களை பரிசாக கொடுங்கள்.
உலகத்தமிழ் மங்கையர் மலர்
♥மாமனார், மாமியாரோடு ஏதாவது ஒரு விஷயத்தில் விட்டுக் கொடுத்து போகும் அவசியம் ஏற்பட்டால், ஒரே ஒரு தடவை நீங்கள் விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அதிலுள்ள சந்தோஷம் உங்களுக்கு புரியும். உங்களை பற்றி ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்தும்.
♥மாமியார் பேசினால் தான் பேசணும், அவங்க சொன்னால் தான் வேலை செய்ய வேண்டுமென்று நினைக்காதீர்கள். அது மிகவும் தவறான குணம்.
♥ஓரகத்தி, நாத்தனார் இருக்கின்றனர் என்றால், அவர்கள் புதுப் புடவையோ, நகையோ அணிந்து வரும் போது மனதார பாராட்டுங்கள். அவர்களின் பிறந்த நாள், திருமண நாளுக்கு உங்களால் முடிந்த ஸ்வீட் செய்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பதிலுக்கு அவர்கள் என்ன செய்வர் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள்.
♥குடும்ப உறுப்பினர் முன், கணவரிடம் வீண் வாதம் செய்வதை தவிருங்கள். சத்தமாக, கோபமாகப் பேசுவதை தவிருங்கள். எந்த அம்மாவும், தன் மகனுடன் சண்டை போடுபவர்களை விரும்ப மாட்டார்கள்.
♥இரவு உணவை முடிந்த வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடப் பழகுங்கள்.
♥இது நம் வீடு, நம் குடும்பம் என்ற எண்ணத்தை ஆழ் மனதில் விதையுங்கள்.
♥ஓரகத்திகளுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்து உறவுகளைக் கெடுத்து கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை வேறு, சூழ்நிலை வேறு. கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கையை சந்தோஷமாக, ஜாலியாக அனுபவிக்கலாமே!
♥உங்களால் கணவருக்கும், மற்றவர்களுக்கும் எப்போதுமே சந்தோஷத்தை மட்டுமே கொடுக்க முடியும் என்றால், எங்கேயும், எப்போதும் நீங்கள் தான் நம்பர் 1. சமர்த்து மருமகள்' என்று பெயரெடுக்க வாழ்த்துகள்!
0 Comments
Thank you