குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை கத்துவது தவறு...
* குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்போதே அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க முடியும். சமுதாயத்தோடு ஒத்து வாழ முடியும். மிக தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சற்று தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும்.
* குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட், போதை பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றன. அதுவும் குடும்ப நபர்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகள் அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள் தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது.
* அதுபோல் பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே. இதில் உண்மை என்னவென்றால் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினைவிட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளும் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.
* அது போன்று குழந்தைகளிடம் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்குச் சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளை இது தவறு, அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும் நாம் அதுபோல் சரியாக வாழ்வதுமே சிறந்தது.
* நல்ல நீதிநெறி கதைகளை அவர்களுக்குச் சொல்வது சிறந்தது.
* அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.
0 Comments
Thank you