HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்)

♥தீட்டு நாட்கள்  (அந்த மூன்று நாட்கள்)  

♥ஏன் தீட்டான பெண்களை வீட்டின் மூலையில் அமரவைத்து மூன்றுநாட்கள் எந்த வேலையும் செய்ய விடாமல் அமர சொன்னார்கள் நம் முன்னோர்கள் அந்த காலத்தில்  

♥அதாவது ஆரியர்கள் வருவதற்கு முன்  பெண்களின் இரத்தபோக்கை கண்ட நம் முன்னோர்கள் அவர்களின் உடல் வலிகளை உணர்ந்து அந்த மூன்று நாட்கள் ஓய்வு அளித்தனர்.  அந்காலங்களில் இன்றுபோல் துணி நாப்கின் போன்ற உபகர்கணங்கள் பயன் படுத்தவில்லை மாறக வாழை மட்டைகளையும் மண் பாண்டங்களையும்  பயன் படுத்தினர்.  

♥அது மட்டுமல்லாமல் இரத்தம் தரையெங்கு விழும் என்பதால் ஒரே இடத்தில் அமர செய்தனர்.இதனால் கோவில்கள் செல்லமுடியவில்லை. விளக்கேற்றவோ வீட்டுவேலைகள் செய்தால் இரத்தபோக்கு அதிகரிக்கும் இடுப்பு வலி ,கை,கால் குடைச்சல் போன்ற விசயங்களினால் அவதிப்படுவர் என்பதினால் மட்டும்.

 இதற்கு பெயர் தீட்டு என்று பலர் பொய்யுரைத்தனர்

♥ஆனால் இறைவனை எக்காலமும் வணங்கலாம் இறைவனை வணங்க சாஸ்த்திரம் தேவையில்லை

கீழே ஒரு உண்மையான வரலாறு

♥"மாதவிடாய் காலத்தில் ஞானசம்பந்தருடன் சோதியில் கலந்த பெண்ணைப்பற்றி தெரியுமா???"

♥திருஞானசம்பந்தர் தனியாக சிவசோதியில் கலக்கவில்லை. சம்பந்தரின் திருமணவிழாவில் சோதியாய் தோன்றிய சிவபெருமானுடன், திருமணவிழாவுக்கு வந்த அனைவரையும் சேர்த்துக்கொண்டு கூட்டமாக சோதியில் கலந்தவர்தான் சம்பந்தர் பெருமான். 

♥ஈசன் சோதியாக எழுந்ததும், எல்லோரும் சிவனோடு சேர்ந்து பேரின்பவீடான ஈசனின் திருவடிநிழலை அடைவோம் வாருங்கள் என்று சம்பந்தர் அழைத்ததும், அனைத்து மக்களும் சோதியோடு சேர்ந்தனர். ஆனால் ஒரு பெண் மட்டும் தயங்கி ஓரமாக நின்றால். அப்பெண்ணை பார்த்து சம்பந்தர், ஏனம்மா இங்கு நிற்கிறாய்!! ஈசனோடு சேர விருப்பமில்லையா?? என்று கேட்டார்.

♥கண்கள் கலங்கிய நிலையில், "சுவாமி, நான் தீட்டு பட்டுவிட்டேன். மாதவிடாய் காலத்தில் இருக்கிறேன். நான் எப்படி!!!!!!!!" என்று சொல்லி தன் இயலாமையையை கண்ணீரால் தெரியப்படுத்தினால். 

♥இதை கேட்ட ஞானசம்பந்தர் என்ன கூறினார் தெரியுமா?????
"அம்மா...... நீ தீட்டு என்று கருதுவதால் இது தீட்டு ஆகிவிடாது. அப்படியே இது தீட்டு என்றால், உன் தீட்டு வெறும் தீப்பொறிப்போன்றதே. சிவபெருமான் சோதிரூபமானவன். "இந்த சிறிய தீப்பொறி, அந்த சோதியை என்ன செய்துவிடும்" என்று சொல்லி, அப்பெண்ணை தேற்றி, அவளையும் சிவபெருமானோடு சேரச்செய்தார்.

♥மாதவிடாய் என்பது உடலின் இயல்பு. அது ஒருபோதும் தீட்டாகாது. 365 நாளும் சிவபெருமானை வழிபடலாம். 365 நாளும் சிவச்சின்னங்களை அனியலாம். 

♥மாதவிடாய் காலத்தை தீட்டு என்றும், தீட்டு நேரத்தில் ஈசனை பார்க்கக்கூடாது என்றும் சிவச்சின்னங்கள் அணியலாகாது என்றும், வீட்டின் பூசையரைக் கதவுகளை தாழிடவேண்டும் என்றும் சிவனடி சேர்ந்த நால்வர் பெருமக்களும் நாயன்மார்களும் எங்கும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன்...... சிவபெருமானே தம் கைபட எழுதிய திருவாசகத்திலும் அப்படி ஏதும் குறிப்பிடவில்லை.

♥சிவனடியை சேராதவர்களும், சிவனடியை சேர விடாதவர்களாலும் உருவாக்கப்பட்ட நெறிதான், மாதவிடாய் காலத்தில் இறைவனை பார்கவே கூடாது என்ற நெறி.

♥சிவபெருமான் மீது மெய்யாகவே அன்பு கொண்டவர் தொழுநோயராக இருந்தாலும், மாட்டின் தோலை உறித்து பிழைப்பு நடத்தும் புலையராக இருந்தாலும், அவர்தான் நான் வணங்கும் கடவுள் என்று சிவனடி சேர்ந்த அப்பர் பெருமான் பாடியுள்ளார். தொழுநோயைவிட மோசமானதா மாதவிடாய் காலம்????

♥எங்கள் வீட்டில் இந்த பழக்கம் செல்லாது. யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அஞ்சவேண்டாம். ஈசனோடு நெருங்கி பழக பழக, உங்கள் வீட்டாரும் ஈசனை உணர பழகிக்கொள்வர். துனிவே சிவம்.

♥மறையும் முறையும் எமக்கில்லை
மனமும் மொழியும் தடையில்லை
சிவனை நினைப்போம்
சிவனை உரைப்போம்
சிவனடி சேரவே சீவித்திருப்போம்

Post a Comment

0 Comments