அழகான வரிகள்
❤ அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில் நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள்.
❤ பொறாமைக்காறரின் பார்வையில் நாம் அனைவரும் அகந்தையானவர்கள்.
❤ புரிந்து கொண்டோரின் பார்வையில் நாம் அற்புதமானவர்கள்.
❤ நேசிப்போரின் பார்வையில் நாம் தனிச்சிறப்பானவர்கள்.
❤ காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் பார்வையில் நாம் கெட்டவர்கள்.
❤ எம்மைப்பற்றி ஒவ்வொருவருக்கும் ஓர் தனியான பார்வை உண்டு.
❤ ஆதலால் பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்டச் சிரமப்படாதீர்கள்.
❤ இறைவனின் திருப்தியே உங்களுக்குப் போதுமானது.
❤ மனிதர்களைத் திருப்திப்படுத்துதல் என்பது எட்டமுடியாத இலக்கு.
❤ இறைவனைத் திருப்திப்படுத்துதல் என்பது எட்டக்கூடிய இலக்கு.
❤ எட்டமுடியாததை விட்டுவிடுங்கள். அடைய வேண்டியதை விட்டுவிடாதீர்கள்.
0 Comments
Thank you