♥குடும்பம் என்னும் சக்கரத்தை நகர்த்தி செல்வதில் கணவன் எந்த பாரபட்சமும் பார்க்காதவர். அனைத்து குடும்ப உறுப்பினரையும் சமமாக எண்ணுவதுண்டு.
♥கணவரின் தங்கை, வீட்டிற்கு வந்தால் முகத்தை மனைவி அந்தப்பக்கம் திருப்பிக் கொள்ளும் போது, கணவரோ நேர்மாறாக மனைவியின் தங்கை வீட்டிற்கு வரும் போது முகத்தை ஒரு நாளும் திருப்பிக் கொண்டதில்லை. முகத்தில் புன்னகை பூக்க கொழுந்தியாளை வரவேற்பதுண்டு.
♥மனைவியை விட அவரது அக்கா, தங்கை மேல் கூடுதல் பிரியம் வைத்திருப்பதை கூட சில மனைவியர் புரிந்துக் கொள்ளாமல் சந்தேகப்படுவதுண்டு.
♥மனைவி என்ன சமைத்துப் போட்டாலும் குறை சொல்லாமல் சாப்பிடுவோர் கணவன்மார்கள். ஊரே பிரியாணி சாப்பிடும் போது கோபத்தில் மனைவி ரவா உப்புமா செய்தாலும் ரசித்த முகத்துடன் சாப்பிடுவது கணவர் குணம்.
♥மனைவிக்கு கிச்சனில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எல்லா கணவருக்கும் உண்டு. காய்கறி வெட்டித் தரலாமே என கிச்சனுக்கு சென்றால் ஏதாவது திட்டி அனுப்புவது மனைவி வழக்கம்
0 Comments
Thank you