♥நேர்ப்பேச்சு
சில பெண்கள் நேரடியாக ஒரு விஷயத்தைக் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசுவார்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் அதைக் கேட்பதற்கு பொறுமை இருப்பதில்லை.
♥இப்ப என்ன தான் சொல்ல வர்றே? என்று கத்துவார்கள். ஜாடை பேசுவது, பொருட்களை நங்கென்று வைப்பது, பிள்ளைகளை அல்லது வேறு யாரையோ திட்டும் சாக்கில் கணவனை இடித்துரைப்பது போன்றவற்றை மனைவியானவள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த இல்லறத்தில் விரிசல் விழக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு.
♥ஒரு சில வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை பளிச்சென்று சொல்வதே சிறப்பு. மேலும் எல்லா விஷயங்களும் இருவரும் ஒளிவு மறைவின்றி விவாதிக்க வேண்டும்.
0 Comments
Thank you