♥பெண்களின் கூந்தலில், இயற்கையாக வாசம் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து, இறைவனே சண்டையிட்ட வரலாறு நம்மிடம் உண்டு.
♥அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கூந்தல். அதனால், எல்லா பெண்களும் கூந்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.
♥இன்றைய நவீன பெண்கள், கூந்தலை மேலும் அழகுப்படுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால், முடி உதிர்தல், முடி உடைதல், விரைவில் நரைத்துப் போகுதல் போன்ற, பின் விளைவுகளுக்கு ஆளாகின்றனர்.
♥அந்த பிரச்னையை தீர்க்க, நம்மிடம் பாரம்பரிய வைத்திய முறை உண்டு.
♥செம்பருத்தி,
எலந்தை கொழுந்து,
கரியாலை,
பொன்மேனி
இவற்றை காய வைத்து அரைத்து சூரணமாக்கி, 500 கிராம் சுத்தமான தேங்காய் எண்ணெயில் கலக்கி, இளம் தீயாக எரித்து காய்ச்ச வேண்டும்.
♥நன்றாக ஆறிய பின்,
நன்னாரி வேர்,
விழாமிஞ்சி வேர்,
வெட்டி வேர்,
கார்போக அரிசி,
வெந்தயம்
இவற்றை எண்ணெயில் போட்டு ஊறிய பின், கூந்தலுக்குத் தடவி வந்தால் நரை வராது; முடியும் உதிர்வது நின்று விடும்; கறுமை நிறம் அதிகரிக்கும்
♥இவை அணைத்தும் நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்.
0 Comments
Thank you