♥அன்பு மட்டுமே நிரந்தரமானது என்பதை, எப்போதும் மறக்காதீர். உங்கள் கணவன் மனைவி உங்களிடம் 100 மடங்கு அன்பை செலுத்தினால், நீங்கள் அதைவிட அதிக அன்பை செலுத்துங்கள்.
♥உங்கள் துணையின் பழக்க வழக்கங்களை கூர்ந்து நோக்கி, அவர்களுக்கு பிடித்த மாதிரி உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். நம்முடைய எண்ணங்களுக்காகவும், நமக்காகவும் மற்றவர்களை மாற்றுவது சுலபமல்ல. ஆனால், அவர்களுக்காக நாம் நம்மை மாற்றிக் கொள்வது வெகுசுலபம்.
♥அது நமக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியும் கூட.
பரஸ்பரம் விட்டுக் கொடுப்பதிலும், அன்பு செலுத்துவதிலும், அரவணைப்பதிலும், அனுசரித்து செல்வதிலும், முதலாவதாய் இருங்கள்.
♥நீங்கள் கொடுத்த அனைத்தும் உங்களுக்கு இருமடங்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
0 Comments
Thank you