HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கீரைகளில் முளைக் கீரை தனித்துவமானது.

♥கீரைகளில் முளைக் கீரை தனித்துவமானது. சாதாரணமாக தெருக்களில்கூட கிடைக்கக் கூடியது. வீட்டிலும் வளர்க்கலாம். முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. இதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும். முளைக் கீரையின் மருத்துவப் பயன்கள் பற்றி பார்ப்போம்.
♥இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்வதோடு, இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு  உதவுகின்றது. முளைக் கீரை அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட  இருமலும் குணமாகும்.

♥முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து,  சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்துவகையான காய்ச்சலும் குணமாகும்.

♥முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, ரத்த  மூலம் போன்றவை சரியாகும்.

♥முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி,  நல்ல பசி உண்டாக்கும்.

♥முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மைக் குறைபாடு நீங்கும்.

♥முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப்  போதிய அளவில் கிடைக்கும். 40 நாட்களுக்குத் குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள்.

♥முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை  சரியாகும்.

♥சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல்  உடையது. முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.

♥முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்  பொலிவு உண்டாகும்.

♥சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக் கீரைச்   சாற்றில் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.

Post a Comment

0 Comments