♥கணவன் இருந்தும் விதைவகளாக வாழும் பெண்கள்...
♥நமது நாட்டில் ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்து, புகுந்த வீட்டிற்கு வருகிறாளென்றால் அந்தப் பெண் மட்டும் அவனுக்கு அடிமையல்ல! அந்தப் பெண்ணின் வீட்டார்கள் அத்தனை பேர்களும் கணவனுக்கும் அவனது வீட்டாருக்கும் அடிமையாய் போய்விடுகிறார்கள்.
♥அவனுடைய வீட்டிலுள்ளவர்கள் எல்லோருக்குமே அடிமை சாஸனம் எழுதிக் கொடுத்தவர்கள் போல் செயல் படவேண்டும் என்ற நிலை உள்ளது. மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு கட்டுப்பட்டவர்களாக மாறவேண்டும்....
♥ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்வதென்பது, ஒரு முள் மரத்தில் அழகான சேலையைப் போடுவதைப் போலத் தான். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களைப் பற்றி சொல்லும் போது, “என்ன செய்வது? விடுங்க! நாம பெண்ணு வீட்டுக்காரங்க! கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் போக வேண்டும். முள்ளில் சேலையைப் போட்டாச்சு! என்ன செய்றது? பாத்துத் தான் எடுக்கணும்” என்று சலிப்புடன் கூறுவர்.
♥மனைவி என்பவள் கணவனுக்கு அடிமையாகி விடுகிறாளென்பதற்கு அடையாளம் தான் அவளுக்கு அவன் கட்டுகிற தாலி அல்லது கருக மணி அல்லது மோதிரம்.! அவளது குடும்பமே கணவனுக்கு அடிமை என்பதற்கு அடையாள முத்திரையாக, திருமண நாளன்று பெண்ணுடைய சகோதரன் மாப்பிள்ளையின் கால்களை ஒரு செம்புத் தண்ணீரால் குனிந்து கழுவி விடுவான்.
♥குனிந்து கழுவிக் கொண்டு அடிமைப் பட்டிருக்கும் அந்தப் பெண்ணின் சகோதரனிடம், “நீ மட்டுமல்ல! உன் குடும்பத்தினர் எல்லோருமே இனி எனக்கு அடிமை தான். அதற்கு ஒப்புதல் முத்திரை தான் இந்தத் தங்க மோதிரம்” என்று மாப்பிள்ளை போடுவார். இந்த அடிமைத் தனத்தை முக மலர்ச்சியுடன் ஏற்று அந்தப் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளையை வரவேற்று உள்ளே கூட்டிச் செல்வார்கள்.
♥அந்த வட்டாரத்துக்காரர்ககளும் ஊர் பெரியவர்களும் மாப்பிள்ளையுடன் சென்று அந்த அடிமைத்தனத்திற்கு அங்கீகாரம் தந்து விடுகிறார்கள். இது தான் அந்த நிகழ்ச்சியின் தத்துவம்.
♥ஒரு பிரச்சனை என்றால் மாமியார் மட்டுமல்ல! வீட்டிலுள்ள பெருசுகள் முதல் சிறுசுகள் வரை, குஞ்சிலிருந்து குருனா வரை அவளுக்கு எதிராக ஒன்று திரண்டு விடுவார்கள். இவள் ஏற்றுக் கொண்ட மாப்பிள்ளையும் ஒரு மாதிரியாக அமைந்து விட்டால் நரகம் தான். ஒன்று அப்பெண் தானாகவே தற்கொலை செய்து கொள்வாள். அல்லது அவர்களே கொன்று விடுவார்கள். இப்படித்தான் பல ஊர்களில் நடக்கிறது
♥இப்படி நடப்பது கொஞ்சமென்றால் இது போன்ற பிரச்சனையில் தாங்க முடியாமல் அந்தப் பெண்ணே தாய் வீட்டிற்கு வந்து விடும். அல்லது அந்தக் குடும்பத்தினரோ அல்லது கணவனோ அவளைத் தாய் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். இப்படிப்பட்ட பஞ்சாயத்துத்துகள் தான் இப்போது அதிகம் நடக்கிறது.
♥இப்படி எத்தனை பெண்கள் தங்களுடைய தாய் வீட்டில் குழந்தைகளோடு சிரமப்பட்டு, கண்ணீரும் கம்பலையுமாக கணவர்கள் இருந்தும் விதவைகளாக காலந் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
♥இவ்வாறு மனைவியைத் துன்புறுத்தி அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது. எத்தனையோ கண்வன்மார்கள் தன்னை நம்பி வந்த பெண்ணை அனுபவித்து விட்டு அவளுடைய கையில் ஒரு குழந்தையைக் கொடுத்து விடுவதுடன் அவளிடம் சண்டையிட்டு அவளை அவளுடைய தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.
♥இதன் பின்பு அவர்கள் அப்பெண்ணுடைய நிலையையும் அக்குழந்தையின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதில்லை. யாரோ, எவரோ என்று கண்டும் காணமால் இருந்து விடுகிறார்கள். இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படும் போது சமூகம் கூறும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை.
♥இவ்வாறு ஆண்கள் பெண்களுக்கு எதிரான பலவிதமான கொடுமைகளைப் புரிவதோடு அவற்றுக்குத் துணை போவதைப் பார்க்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை. அந்த அளவுக்குக் கொடிய கொடுமை கொடி கட்டிப் பறக்கிறது. இதையெல்லாம் கவனிக்கும் போது இவர்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பியவர்களா? என சந்தேகப்பட வேண்டி உள்ளது. அந்த அளவுக்குக் கொடுமைகள் புரிகிறார்கள்.
♥பெண்ணுக்கு மட்டுமல்ல! பெண்ணைப் பெற்றவர்களுக்கும் அவர்கள் மண்டை ஒட்டை மண்ணில் கொண்டு வைக்கும் வரை பிரச்சனை ஒய்ந்த பாடில்லாமல். நீண்டு கொண்டே செல்கிறது...
♥திருமணமென்பது வெறும் மகிழ்ச்சியும் குதூகலமும் மட்டுமன்று. மாறாக அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாசப் பிணைப்பையும் கணவனுடைய தேவையை மனைவி நிவர்த்தி செய்வதும் மனைவியுடைய தேவையை கணவன் நிவர்த்தி செய்வதுமாகும்.
♥பெண்ணுடைய நலத்திற்கு முழுவதுமாக கணவன் பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒரு உறுதியான ஒப்பந்தமாகும். இதை அவன் இறைவன் முன்னாலும் அவையோர் முன்னாலும் ஒப்புக் கொண்டேன் என்று கூறி கொடுக்கும் ஓர் உறுதிமொழியாகும்.
♥சிறிய விஷயத்திற்காகவெல்லாம் சண்டை போடாமல் பெண்ணிடத்தில் குறைகள் தென்பட்டால் அதைப் பொறுத்துக் கொள்வது தான் நல்லது. அதன் மூலம் வேறு ஏதோ ஒரு வகையில் நல்ல பலனை பின்னால் ஏற்படும் என்று பொறுத்து நல்ல முறையில் மனைவியரிடம் நடந்து கொள்ள வேண்டும் .
♥ பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக் கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்!
♥நம் மனைவிடம் கனிவாகப் பேச வேண்டும், நம் தோற்றத்தையும் செயல்களையும் இயன்ற வரை அழகிய வடிவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனைவியர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென நாம் நினைப்பது போல் நாம் அவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
♥பெண்கள் விஷயத்திலும் அவர்களின் உரிமையைப் பேணும் விஷயத்திலும் ஆண்கள் மிகவும் கவனமற்றவர்களாக, அலட்சிய மானவர்களாக இருக்கிறார்கள். அதிலும் கணவன்கள் தம் மனைவியர்கள் விஷயத்தில் மிகவும் அலட்சியமாகவே ஏனோ தானோ என இருக்கிறார்கள். சிலர் வரம்பு மீறி மோசமாக நடந்து கொள்கிறார்கள்
♥மனைவியிடம் சிறந்தவரே மனிதரில் சிறந்தவர் பொதுவாக கணவன்மார்கள் தம் மனைவியிடம் காட்ட வேண்டிய மென்மையையும் பாசத்தைûயும் அவளிடம் காட்டாமல் பிறரிடம் காட்டுகிறார்கள். ஊருக்கெல்லாம் நல்லது செய்து நல்லவன் என்ற பட்டத்தை வாங்குவான். ஆனால் தன்னுடைய மனைவியிடம் மிகவும் மோசமான மனிதனாக நடந்து கொள்வான்.
♥இப்படிப் பட்டவர்கள் எவ்வளவு தான் ஊர் உலகத்திடம் நல்ல பெயர் வாங்கினாலும் தன் மனைவியிடம் நன்முறையில் நடந்து கொள்ளாவிட்டால் அவன் சிறந்தவனாக முடியாது
♥இன்னும் சில கணவன்மார்கள் வெளியில் தான் விரும்பும் உணவை உண்டு விட்டு வீட்டிற்கு வருவார்கள். வீட்டில் இவனுக்காகக் காத்திருக்கும் மனைவியோ வீட்டில் உள்ள பழைய உணவை உண்பாள். தான் உண்டதை தன் மனைவிக்கும் வழங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. மனைவியை உணர்வுகள் அற்ற ஆடு மாடுகளை போன்று நடத்துகிறார்கள். கணவனுக்கு மனைவி எந்த விதத்திலும் இளைத்தவள் இல்லை. அவன் உண்ணக் கூடியது பிரியாணியாக இருந்தாலும் பழைய கஞ்சியாக இருந்தாலும் அதில் மனைவியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
♥உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தவேண்டாம்.
♥பெண்களும் சாமானியர்களல்ல. அவர்களும் தங்களது கை, கால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
முகத்தில் அடிக்கக் கூடாது என வைராக்கியம் உடையவனைக் கூட முகத்தில் பளார் பளார் என விளாசித் தள்ளும் அளவுக்குக் கோபத்தை ஏற்படுத்துவார்கள். எனினும் அதில் ஆண்கள் நிதானத்தையே கடைப் பிடிக்க வேண்டும். காரணம் பெண்கள் மென்மையானவர்கள் ..
♥உங்கள் மனைவிக்கு உணவை ஊட்டி விடுங்கள்
திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் பாசமாக நடந்து கொண்டால் தான் அவ்வாழ்வு இனிக்கும். முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதினால் வெறுப்புகள் அதிகமாகும். எனவே பாசத்தை ஏற்படுத்த கணவன்மார்கள் தன் மனைவிமார்களுக்கு உணவு ஊட்டி விடுவது கூட தர்மம்
0 Comments
Thank you