#கொரோனா_வைரஸ்
#குழந்தைகளுக்கு_சொல்லி_தரவேண்டியவை
கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் கைகழுவும் வழிமுறையை முதலில் நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் சூழ்நிலையில், ஒவ்வொரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள். நமது குழந்தைகள் டியுஷன் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை பலவகையான சூழல்களை எதிர்கொள்கின்றனர். எனவே சரியான நடவடிக்கைகளின் மூலம் குழந்தைகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், பதட்டமடையத் தேவையில்லை.
குழந்தைகள் கை கழுவும் போது கைகளின் பின்புறத்திலும், விரல்களுக்கு இடையிலும், நகங்களுக்கு அடியிலும் தேய்த்துக் கழுவ வேண்டும். சோப்பு, தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த ஹேண்ட் சானிடைசர்கள் மூலமாக குறைந்தது 20 விநாடிகள் வரை கைகழுவுவது மிகவும் நல்லது. இந்த வழிமுறையை முதலில் நாம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும்.
குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற அதிக உடல் தொடர்புகளை கொண்ட செயல்களை தவிர்க்க சொல்லிக் கொடுக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு இருமல், தும்மல் வரும் போது எப்படி தற்காப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும் என்பதனை கற்பிக்க வேண்டும். “ஏனெனில், குழந்தைகள் தும்மும்போதும் (அ) இருமும்போதும், தங்கள் வாயை மூடுவதில்லை. கைக்குட்டையை பயன்படுத்துவதில்லை.
கை கழுவுதல், சுத்தமான இடங்களிலிருந்து சாப்பிடுவது போன்ற வழக்கமான முன்னெச்சரிக்கைகள் அவசியம். நன்கு சமைத்த சூடான உணவில் கவனம் செலுத்துங்கள், குறிப்பாக அது இறைச்சியாக இருக்கும்போது. கொரோனா வைரஸ் விலங்குகளில் காணப்படுகிறது. எனவே நீங்கள் சமைத்த உணவை சாப்பிடுவது மிக முக்கியமாக கருதப்படுகிறது.
0 Comments
Thank you