HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அவளுக்கு வயது 24.

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR

♥அவளுக்கு வயது 24. சுமாரன அழகு கம்பீரமான உடல்வாகு கொண்டவள். பிளஸ்-டூ படித்துவிட்டு, ஓட்டல் ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்தாள். அவளது தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலைபார்க்கிறார். குடிப் பழக்கம் கொண்டவர். அதனால் தாயார் வீட்டு வேலை செய்து, குடும்பத்தை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

♥அவளுக்கு, தந்தை வரன் தேடிக்கொண்டிருந்தார். அவள் வேலை இல்லாட்டியும் பரவாயில்லை ‘குடிப்பழக்கமில்லாத மாப்பிள்ளை வேண்டும்’ என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்தாள். ஆனால் அவர் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்த வரன்கள் எல்லோருமே மதுப்பழக்கம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். அவளும் நிராகரித்துக் கொண்டே இருந்தாள்.

♥இறுதியில் அவளுக்காக பேசி முடித்த வரன், டிரைவராக வேலைபார்த்துக் கொண்டிருப்பவன். பெண் பார்க்க வந்தபோதே அவள், ‘குடிப்பீர்களா?’ என்று நேராகவே கேட்டாள். அவன், அந்த பழக்கமே கிடையாது. குடிக்கிறவங்க சகவாசமே எனக்கு பிடிக்காது என்றான். அதனால் மண நாள் நிச்சயிக்கப்பட்டது.

♥திருமணம் பேசி முடிக்கப்பட்ட பின்பு, வருங்கால கணவர் தன்னோடு பேசுவார் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் பேசவில்லை. அவளாக பேச முயற்சித்தபோதும் அவன் மகிழ்ச்சியாக பேச்சை தொடரவில்லை. அவள் குழம்பினாள். தனது உள்ளுணர்வு எச்சரிப்பதாக தந்தையிடம் கூறி, மீண்டும் வரனை பற்றி நன்றாக விசாரிக்கும்படி கூறினாள். ஆனால் அவரோ, அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘நான் விசாரித்தேன். பையன் ரொம்ப தங்கமானவன்னு ஊரில் எல்லோரும் சொல்கிறார்கள்’ என்றார்.

♥அவளுக்கு தந்தையின் பேச்சில் நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் தனது தாய் மாமனை அனுப்பி வைத்தாள். அவர் மாப்பிள்ளையை வரவழைத்து பேசினார். ‘நீங்கள் முழுமனதோடு திருமணத்திற்கு சம்மதிக்கிறீர்களா? உங்களுக்கு விருப்பக்குறைவு ஏதாவது இருந்தால் திருமணத்தை நிறுத்திவிடலாம். ஏதாவது பிரச்சினை இருந்தால் வெளிப்படையாக பேசுங்கள்’ என்றார். ஆனால் அப்போதும் அவன், நான் கூச்ச சுபாவம் உடையவன் யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பேசிவிடமாட்டேன்.  திருமணத்தில் தனக்கு முழு சம்மதம் என்றான்.

♥திருமணம் நடந்தது.  நண்பர்கள் என்று வந்தவர்களில் சிலர் பெண்களை பார்த்த விதமும், பேசிய பேச்சும் அவளுக்கும்   பெண் வீட்டாருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் அவ்வப்போது புது மாப்பிள்ளையிடம் வந்து ரகசியம் பேசியபடி இருந்தனர்.

♥முதலிரவு அறை. அவள் வெகு நேரம் காத்திருந்த பின்பு, குனிந்த தலையோடு புதுமாப்பிள்ளை உள்ளே நுழைந்தான். இரண்டு மணி நேரம் கழிந்திருக்கும். திடீரென்று அறைக் கதவு திறந்தது. பொத்தென்று புதுமாப்பிள்ளை வெளியே வந்து விழுந்தான். பால் செம்பால் அடித்த அடியில் அவன் உதடு பிய்ந்திருந்தது. தலையிலும் ஆங்காங்கே ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

♥அவளது பெற்றோர் பயந்து ஓடிவந்து பார்த்தபோது காயம் தந்த வேதனையில், போதையை மீறி அவன் துடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஒரு வாடகைக்காரை ஏற்பாடு செய்து புது மாப்பிள்ளையை மட்டும் ஏற்றி, அவனது வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.

♥முதலிரவு அறைக்குள் நடந்தது இதுதான்..!
அறைக்குள் அவன் முழு போதையில் நுழைந்திருக்கிறான். அதனால் அதிர்ந்துபோன புதுப்பெண் கோபத்தில் கத்தி காரணம் கேட்டபோது ‘தனக்கு 15 வயதில் இருந்து குடிப்பழக்கம் இருப்பதாகவும், திருமணமான பெண் ஒருத்தியோடு தொடர்பில் இருப்பதாகவும், அவளை மறக்க முடியாததால் குடித்திருப்பதாகவும்..’ ஒப்புதல் கொடுத்துள்ளான். தன்னை அவன், திட்டமிட்டு ஏமாற்றியதால் வெகுண்டெழுந்த அவள் உள்ளே வைத்தே அவனை ஆத்திரம் தீர அடித்து துவைத்து விட்டாள்.

♥தம் பக்கம் தவறு இருப்பதால் மாபபிள்ளை வீட்டார் எல்லோரும் ஒதுங்கிவிட அவள் இதைப்பற்றி சிறிது கூட கவலை இன்றி விவாகரத்துக்கு போட்டுவிட்டு தன் வேலையை பார்க்கிறாள்....



Post a Comment

0 Comments