HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது... #தடுக்க என்ன செய்ய வேண்டும்?

♥#வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது... #தடுக்க என்ன செய்ய வேண்டும்?

♥பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். ஆனால் சில நேரங்களில் அது ஏதோவொரு பிரச்னையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். எது இயல்பாக ஏற்படும் வெள்ளைப்படுதல், எது நோய்க்கான அறிகுறி என்று கண்டறிவது சற்று சிரமம்தான். 

♥வெள்ளைப்படுதல் ஏற்படக் காரணம் என்ன, அதை எப்படிச் சரிசெய்வது, வெள்ளைப்படுதலை தவிர்ப்பது எப்படி? 

♥மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவர் சுபஶ்ரீ விளக்குகிறார். 

♥``வெள்ளைப்படுதல் என்பது, தொற்றுப் பிரச்னை. இது பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, வெயில் காலத்தில் இதன் தீவிரம் அதிகமாக இருக்கலாம். அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னை குறித்து பெரும்பாலானவர்களிடம்  போதிய விழிப்புணர்வு கிடையாது. பெண்கள் வெள்ளைப்படுதல் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

♥பொதுவாகப் பெண்களின் பிறப்புறுப்பு செல் சுவர்களில், நிறமற்ற, லேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட திரவம் இயற்கையாகச் சுரக்கும். அமிலத்தன்மை நிறைந்த அந்தத் திரவம் கிருமிகள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் பிறப்புறுப்பைப் பாதுகாக்கும்.

♥பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற தொற்றுக்கிருமிகள் பிறப்புறுப்பைப் பாதித்தால், அந்தப் பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாற்றமடையும். நிறமற்ற நிலையில் வெளிப்படும் திரவம் அதன்பிறகு வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் வெளிப்படும். இப்படி, தொற்று காரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால், கர்ப்பப்பையிலும் இனப்பெருக்க உறுப்பிலும் பிரச்னை ஏற்படலாம். 

♥பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் சிறுநீர்ப்பாதையும் பிறப்புறுப்பும்  மிக நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஏற்படும் தொற்று மற்ற இடத்துக்கு வேகமாகப் பரவும். எனவே, வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

♥தொற்று பாதிப்பு எதுவும் இல்லாமலும்கூட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இது அடுத்த சில தினங்களில் சரியாகிவிடும். பயப்படத் தேவையில்லை. பாதிப்பில்லாத இந்த வெள்ளைப்படுதல், பெரும்பாலும் பருவமடையும் காலத்துக்கு சில நாள்களுக்கு முன், மாதவிடாய்க்கு முந்தைய அல்லது பிந்தைய இரு நாள்கள் மற்றும் கர்ப்பமான நேரங்களில் மட்டுமே ஏற்படும்.

♥வெள்ளைப்படுதலுக்குக் காரணமான, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மிகமுக்கியமான சில தொற்றுகள் குறித்தும், அது ஏற்படுத்தும் அறிகுறிகள் குறித்தும் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். 

#பால்வினைத்_தொற்று
♥பாதுகாப்பற்ற உறவு மற்றும் பிறப்புறுப்பு சுகாதாரத்தைப் பின்பற்றாமல் உறவு கொள்வதால் இத்தகைய தொற்று பாதிப்புகள் ஏற்படும். பிறப்புறுப்பில் வீக்கம் அல்லது புண், கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கொண்டு பால்வினைத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.

♥இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். பிரச்னை தீவிரமானால் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும். இதைச் சரிசெய்யாவிட்டால், சிறுநீர்ப் பாதை மற்றும் கர்ப்பப்பைக்குத் தொற்று பரவும். 

#காளான்_தொற்று
♥பிறப்புறுப்பில் இயற்கையாகக் காணப்படும் நுண்ணுயிர்க் கிருமிகளான ஈஸ்ட் மூலம் காளான் தொற்று ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பிறப்புறுப்பில் புண் உண்டாகி எரிச்சல் ஏற்படலாம்.

♥இந்த பாதிப்பின்போது வெண்மை நிறத்தில் வெள்ளைப்படுதல் இருக்கும். இதைச் சரிசெய்யாவிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் வீக்கம் ஏற்படலாம்.

♥இவைதவிர, உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவையும் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தி, பிறப்புறுப்பு தொற்றுக்கு வழிவகுக்கலாம். சிறுநீர் கழிக்கும்போது பிறப்புறுப்பில் அதிக வலி ஏற்படுவதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

♥இந்த பாதிப்புகளின்போது வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படுதல் வெளிப்படலாம். முதல் நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனை பெற்றால் எளிதாகச் சரிசெய்துவிடலாம்.

#பரிசோதனைகள்
♥வெள்ளைப்படுதலின்போது வெளிப்படும் திரவத்தை ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பால்வினைத் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய ரத்த மாதிரியை வி.டி.ஆர்.எல் (VDRL) பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக வெள்ளைப்படுதல் இருந்தாலோ, அப்போது துர்நாற்றம் வீசினாலோ உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

♥வெள்ளைப்படுதல் பிரச்னையின்போது சில பொதுவான #அறிகுறிகள் வெளிப்படும்.

♥சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்

♥பிறப்புறுப்பில் ஒவ்வாமை ஏற்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் சிவந்து காணப்படுவது

♥பிறப்புறுப்பில் புண் அல்லது கொப்புளங்கள்

♥உடலுறவின்போது பிறப்புறுப்பில் தீவிர வலி

#தடுக்க_தவிர்க்க...
♥பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வதன்மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம். 

♥பெண்கள் மாதவிடாய்க் காலத்திலும், உடலுறுவுக்குப் பிறகும் பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.

♥#உள்ளாடைகளைத் தேர்வு செய்வதில்கவனமாக இருக்கவேண்டும். பருத்தித் துணிகளால் ஆன உள்ளாடைகளைத் தேர்வு செய்வது நல்லது. நைலான் வகை உள்ளாடைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

♥காசநோய், மலேரியா, மஞ்சள் காமாலை இருந்தாலும், பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். 

♥நீண்ட நாள் கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம். எனவே, கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். 

♥மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்வதாலும்கூட வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம்.

#சிகிச்சை:
♥வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள், கீழாநெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து ஏழு நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பிரச்னையைச் சரிசெய்யும்.

♥வெள்ளைப்படுதல் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவப் பரிசோதனைமூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதன்மூலம் குணமடையலாம்.

#மேலதிக_தகவல்கள்
♥இந்த நோய் வருவதற்கான காரணங்கள் …….

♥தவறான உணவுப் பழக்கங்கள்.

♥கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்.

♥சுகாதாரமற்ற உள்ளாடைகள்.

♥சுய இன்பம் காணுதல்.

♥ மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்.

♥ ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்.

♥ உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.

♥ கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்.

♥சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.

♥ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

♥தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.

♥ சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

♥அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப்படுதல் உண்டாகிறது.

♥ மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.

♥ எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

#நோயைத்_தவிர்க்க :

♥உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

♥பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

♥ உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

♥சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவு முறைகள்:

♥உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

♥ சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

♥எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.

♥மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.

♥இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

♥இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

♥தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

♥பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.

♥சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

♥வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

♥ அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

♥இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

♥ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

♥நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

♥புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது!

♥மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.

♥கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.

♥ புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.

 ♥வேப்பமரப் பட்டை, பூ, வேர், காய், பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்!

♥பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!

♥உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.
நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது

Post a Comment

0 Comments