#மனைவியின்_அருமை
♥கணவனை இழந்த மனைவியை விடவும் .. மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான்
காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்
♥ஆனால் மனைவியை இழந்த கணவன் தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை தோளுக்குத் தோளாய் இருந்த தோழியை நோய்படும் போது தானும் நோகும் தாயை என பலரை
இழக்கிறான்.
♥ஒரு மனைவி எத்தனை உருவம் எடுக்கிறாள்?
கணவனுக்காக தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்
ஊர் , பெயர் , முகவரி , வீடு முதற்கொண்டு தன் தாயிடம் குடித்த பால் தந்தை தந்த கல்வி தவிர அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன் வருகிறாள்.
♥தான் கண்ட கனவுகள் அனைத்தையும்
கொண்டவனுக்காக மறைக்கிறாள். மறக்கிறாள்.
வீட்டின் வேலைக்காரியாக
சலவைக்காரியாக
சமையல் செய்பவளாக
கணக்குப்பிள்ளையாக
பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள்
உலகத்தமிழ் மங்கையர் மலர்
♥அவள் இருக்கும் வரை
இத்தனை வேலைகள் யார் செய்தார் என்று குடும்பத்தில் யாருக்கும் உணர்ச்சி வருவதேயில்லை.
பொன்னின் அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும்.
பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும் .
♥கவிப்பேரரசு பாடலில் அருமையாக எழுதியிருப்பார்
” காதலி அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை கோடையிலே”
ஆம்.. மனைவியின் அருமையை அவளது மறைவில் தான் ஆடவன் உணர்கிறான்
♥கணவனை இழந்த மனைவியர் நினைவுகளை அசை போடுவார்கள். நல்ல நினைவுகளை கூறுவார்கள்.
மனைவியை இழந்த கணவர்கள் தங்கள் மனைவிகளின் தியாகங்களை எடுத்துக்கூறி புலம்புவார்கள். இன்னும் நல்லா கவனிச்சுருக்கலாம் சார் அவள.. இப்டி சரியா பாக்காம விட்டுட்டேனே சார். என்று அழுது புலம்புவார்கள்.
♥கணவனை இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணத்தையும் மனவலிமையும் கிடைத்து விடுகிறது
ஆனால் மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும் அனாதை ஆனதைப்போன்று தான் இருக்கிறார்கள்
♥தனது சுக துக்கம் இன்ப துன்பம்
தோல்வி வெற்றி அனைத்திலும் கூடவே இருந்து தன்னை சகித்து வாழ்ந்த தனது மனைவி இறக்கும் போது ஒவ்வொரு ஆடவனும் இறந்தே தான் விடுகிறான்.
அதற்குப்பிறகு அவனுக்கென்று எதையும் பெரிதாய் அவன் யோசிப்பதில்லை.
♥அவரவர் மனைவியை அவள் உயிரோடு இருக்கும் போதே முடிந்தவரை நேசிப்போம்.
அவள் இல்லாத போது அசை போடவும் புசித்து வாழவும் நினைவுகள் தேவையன்றோ …
0 Comments
Thank you