♥😍என்_மனைவி (கற்பனை)
♥ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக உறங்கும் என் மனைவியை சற்று அமைதியாக கூர்ந்து பார்க்கிறேன்...
♥இத்தனை வருட வாழ்வில்
அவள் ஆசைகள் என்ன என்பதைக் கூட அறியாத ஆண்மகனாக நான்... இருப்பதை நினைத்து முதன் முதலாக என்னையே வெறுக்கிறேன்...
♥என் கையை பற்றி என்னோடு வாழ வருகையில் அவள் ஒரு வளர்ந்த குழந்தையாகவே எனக்குத் தெரிந்தாள்..
விட்டு வைத்தேனா? இளமையின் மிடுக்கில்
தடுக்கி விழுந்த இரவுகளில் முனகல்களோடு என்னை அணைத்துக் கொள்வாள்
வாலிபத்தின் திமிரில் அவளின் வலிகளை உணர்ந்ததில்லை நான்
♥எப்பொழுது பசித்தாலும் உணவு தயார் பண்ணி என்னை உபசரித்து மகிழும் அவளின் பசியறியாமலே புசித்திருக்கிறேன்...
♥கோபங்கள் எழும் போதெல்லாம் வார்த்தைகளால் வைதிருக்கிறேன்..
திருப்பி ஒரு நாளேனும் என்னை திட்டியதில்லை அவள்..
திட்டி இருந்தால் திருந்தியிருப்பேனோ..
ஏனடி எல்லா வலிகளையும்
உனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாய்..
♥மெதுவாக அவள் கைகளை எடுத்து
என் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன்..
கரடு முரடான அவள் கைகளின் கீறலில் என் கண்களில் நீர்.. வலிக்கிறது கை பட்டதால் அல்ல.. மென்மையான அவள் கைகள் இன்று கரடு முரடான காரணம் நினைத்து..
♥எங்கே இருந்தேன் இத்தனை நாளும்
என்னருகிலேயே இருந்தவளை இத்தனை நாளும் எப்படித் தொலைத்திருத்தேன்..
♥பாவியம்மா நான் பருவ வயதுகளில் உன்னை தூங்க விடவில்லை நான்
பின் நான் பெற்றதுகளும்
உன் நாத்தனார்களும்..
♥செல்வமே அத்தனை சொத்துக்கள் சேர்த்த எனக்கு.. எனக்கு கிடைத்த சொத்து உன்னை பாதுகாக்க மட்டும் எப்படி மறந்தேன்..
♥இத்தனை வருடமும் உன் நிழல் கொண்டு குடும்பம் காத்தவள் நீ
நாங்கள் அத்தனை பேரிருந்தும்
உனக்குள் அனாதை போல வாழ்ந்தவள் நீ
எப்படி மறந்தேன் உன்னை
♥நானில்லாத போதும்
நீ தைரியமாக கடந்து விடுவாய்
உன் இறுதி நாட்களை
நீயில்லாமல் என் வாழ்க்கை
நினைத்தும் பார்க்க முடியவில்லை
என்னால்..
♥தீர்க்க சுமங்கலியாகி
நீ முந்திக் கொண்டால்
ஊரே போற்றும் உன்னை..
உன்னைத் தொலைத்து விட்டு
நானிருந்தாலோ
ஏறெடுத்தும் பாரார் என்னை
நீ இருக்கும் வரையில் தான்
என் திமிரெல்லாம்...
♥சத்தியமாக சொல்கிறேன்
நீ மட்டும் போதுமடி எனக்கு
உன்னை விட எதுவும்
என்னை ஈர்க்காது இனிமேல்..
சாகும் வரையில் உன் காலடி போதும்
உன் மார்போடு எனை அணைத்து தாலாட்டு போதும்...
0 Comments
Thank you