♥சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது.
♥மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள். பெண் அமெரிக்காவில்.
♥"சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடுவீதியில் விட்டுருவாங்க பசங்க" என்றார் வக்கீல்
செந்தில்நாயகம்.
♥"எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்"
"என்ன?"
♥"நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க. நான் பிரிச்சிக் கொடுத்திட்டா என்னை காப்பாத்தாம மறந்துருவாங்கதான். ஆனா நான் சாகணும்னு நினைக்கமாட்டாங்களே. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன்.
♥நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார். நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது."
நன்றி
0 Comments
Thank you