♥குழந்தை
♥'இந்தா பாருங்க ! இதுக்கு மேலேயும் நமக்கு குழந்தை பிறக்கும்கற நம்பிக்கை எனக்கில்லை, பேசாம என் தங்கச்சியக் கட்டிக்குங்க. அவளாவது பெத்துத் தரட்டும்" திவாகர் எவ்வளவோ மறுத்தும் தன் முடிவிலேயே திடமாய் நின்றாள் செல்வி.
♥சில நிமிட அமைதிக்குப் பின. திவாகர் பேசினான். 'ஏன் செல்வி இப்படிச் செய்தால் என்ன?…'
♥அவள் புருவத்தை உயர்த்தி, 'என்ன? 'என்று கேட்க, 'நான் உன் தங்கச்சியக் கட்டிக்கறதை விட நீ என் தம்பி குமாரைக் கட்டிக்கோயேன், அவன் உன்னைவிட ஆறு மாசம் பெரியவன்தான்!.. அவன் மூலமா நமக்கொரு குழந்தை வந்துட்டுப் போவுது!"
♥சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள், அதிர்ந்துபோய்...
'சரி ...சரி...இன்னும் கொஞ்ச வருஷம் பொறுத்துப் பார்ப்போம்" சொல்லியபடி உள்ளே செல்ல, நிம்மதியானான் திவாகர்
0 Comments
Thank you