HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

இன்றைய நிகழ்வு.. கணவனும்..மனைவியும்..

இன்றைய நிகழ்வு.. கணவனும்..மனைவியும்..

"வெயில்ல கடைக்கு போய்ட்டு வந்தது  டயர்டா இருக்கு! கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கப் போறன்.. டிஸ்டர்ப் பண்ணாத!"

"என்னது டயர்டா இருக்கா! இருங்க வாரன் "

"லைட்டாதான் இருக்கு.. நீ ஏன் பதர்ற.."
( தொண்டையில் ஏதோ கமற இந்த நேரம் பாத்துதானா இருமல் வரவேண்டும்?)

" என்னங்க இருமுறீங்க ! கோல்டு கூட இல்லியே ஒங்களுக்கு... அப்ப வறட்டு இருமல்தான் "

"ஒரு தடவதான இருமுனேன்.. அதுக்கு ஏன் அலர்ற"

" இல்லீங்க நீங்க வீம்புக்காவாவது இருமலை  அடக்கிப்பீங்க! இருமிடுங்க.."

"நீ என்ன பைத்தியமா.. இருமல் வராம எப்டி இருமறது "

"சும்மா இருங்க..ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாது.... என்னங்க இது ஒடம்பு சுடுது?"

" ஆமா..! வெயில்ல போனா சுடாதா "

( மனைவிக்கு கொஞ்சம் தாட்டியான ஒடம்பு.. ஒவ்வொரு கையுமே இருபது கிலோ தேறும்.. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுதான்.. இந்த கையை நெத்தியில் வைத்து ஜூரத்தை பாத்தால் நெத்தி வெயிட்டை தாங்கணும்ல!)

" கொஞ்சம் கையை எடேன்! வலிக்குது "

" என்னது தலையை வலிக்குதா? கோல்டு இல்ல.. வறட்டு இருமல்தான்.. டயர்டா இருக்கு...  தலையை வலிக்குது.. ஒடம்பு வேற சுடுது... ஏங்க இது கொரோனா அறிகுறியேதான்.... கடவுளே..நான் என்ன பண்ணுவேன்.. ஏங்க நீங்க போயிட்டா அப்றம் நான் எப்டிங்க இருப்பேன்?"

" போயிட்டாவா?.. என்னடி இது? நான் போயிடுவேன்னு முடிவே பண்ணிட்டியா?" 

"வெள்ளாடாதீங்க ! எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனையாவே இருக்கு ? கை காலெல்லாம் வேற எனக்கு  ஒதறுதுங்க "

"ஏய் இப்ப யாருக்கு ஃபோன் பண்ற "

"கொரோனா ஹெல்ப்லைனுக்கு பண்றங்க ! நல்லவேளை ..ஸேவ் பண்ணி வச்சிருந்தேன்!"

"அதுக்காவ அவுங்களுக்கு ஃபோன் பண்ணனுமா என்னா! பேசாம இரு! நீ வேற எதாவது புதுசா பிரச்சினையை கெளப்பிகிட்டு இருக்காதே!"

" இல்லீங்க! ஒங்கள தனியாவாவது வச்சிருக்கணும்ங்க! மேல மாடி ரூம்ல கட்ல போட சொல்லிர்றேன்.. நீங்க நல்லா ஆவற வரைக்கும் அங்கதாங்க இருக்கணும்! ஒங்க துணியெல்லாம் தனியா தொவைக்கணும்.. சாப்பாடு மேல வந்துரும்.. கண்டதையும் சாப்புடக் கூடாதுங்க! நான் என்னா டயட்டு பேஷண்டுக்குன்னு கேட்டு அப்டியே கொடுக்குறன்!"

"நிறுத்து.. நிறுத்து! என்னா நீ பாட்டுக்கு சொல்லிகிட்டே போற..எனக்கு ஒண்ணும் இல்லங்கறேன்.. கேட்காம நீ பேசிகிட்டே போற! அதெல்லாம் எனக்கு ஒண்ணுமில்ல!"

"ரிஸ்கெல்லாம் எடுக்க முடியாதுங்க ! மேல மாடி ரூமுதான் ஒங்க ரூமு! பசங்கெல்லாம் இருக்காங்க.. தொத்திகிச்சின்னா கஷ்டம் !"

" இதெல்லாம் ரொம்ப ஓவர்! மாடி ரூம்ல ஏசி வேற கெடயாது!.. பயங்கர ஹாட்டா இருக்கும்!"

" என்னது ஏசியா .. ஏசியே கூடாதுங்க! 27டிகிரிக்கு கீழே டெம்பரேச்சர் இருந்தா பயங்கரமா வைரஸ் டெவலப் ஆகுங்க!.. ரூமு ஹாட்டா இருந்தாதான் வைரஸெல்லாம் சாவும்!"

"எனக்கு ஒண்ணும் இல்ல! சொன்னா கேட்க மாட்டியா?"

"இந்த விஷயத்துல நான் யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டங்க ! எனக்கு ஒலகத்துல உங்கள விட எதுவும் முக்கியமில்ல!
மெய்டை ரூமை ரெடி பண்ண சொல்லிர்றேன்.. நீங்க வெளில கிளில வந்துராதீங்க! வருமுன் காப்பவன்தான் அறிவாளி.. துயர் வந்தபின்னே துடிப்பவன்தான் ஏமாளி " ன்னு பாட்டு கூட இருக்கே!"

சர்வண்ட் மெய்டிடம் " மேல ரூம ரெடி பண்ணிடுமா!"

"ஏம்மா! அய்யாவுக்கு நெசமாலுமே நோவா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.. வீட்லயே இருந்தாருன்னா இருவத்தோரு நாளும் பஜ்ஜிய போடு வடைய போடு போண்டாவை போடு.. சூப்பை போடு..ஜூசை போடு ன்னு ஒரே  நச்சரிப்புதான் ! அதுக்குதான் இப்படி போட்டேன் ஒரு போடு!"

" சரி பாவம் போட்டு கொடுத்துல்லாமே மா!"

"ஒனக்குத் தெரியாது.. பஜ்ஜி மாவு திக்கா இருந்தா இது என்னா தலவாணியா ங்க வேண்டியது.. மாவு தண்ணியா இருந்தா இருந்தா இது சிப்ஸா பஜ்ஜியா ங்க வேண்டியது.. போண்டா வை போட்டா களிமண்ணிலயா போட்டேங்க வேண்டியது.. வடையை ரப்பர் ங்க வேண்டியது! சூப்பை குடுத்தா இரசமா கொழம்பாங்க வேண்டியது!.. ஏதோ என் நல்லகாலம் ஒரு தடவை இருமுனாரு.. டயட் எல்லாம் கண்ட்ரோல் தான் சொல்லி பயமுறுத்தி விட்டுட்டேன்!மொதல்ல டிவி பாக்க முடியாது தெரிஞ்சிக்கோ! சீரியல எல்லாம் என்ன கருமம் இதுன்னு திட்டிகிட்டே உச் உச்சின்னுகிட்டு இருப்பாரு!"
😆😆😄😄🤔😩😠🖕

Post a Comment

0 Comments