♥பெண்கள், கண்கள் மாதிரி!
♥ஞாயிற்றுக் கிழமைகளில், அருகில் உள்ள என் தோழியின் வீட்டிற்கு செல்வது வழக்கம். நான் போகும் போதெல்லாம், அவள் தன், ஒன்பது வயது மகனிடம், பெண்களை உயர்த்தி பேசியபடி இருப்பாள்.
♥இதுபற்றி அவளிடம் கேட்ட போது, 'நான், என் மகனிடம், பெண்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்குறேன். 'பெண்கள் அனைவரும் அம்மாவை போன்றவர்கள். உடன் படிக்கும் மாணவியர், கூட பிறந்தவர்கள் மாதிரி; உனக்கு அக்கா, தங்கை இருந்திருந்தால், நீ எப்படி அவங்கள பத்திரமாய் பாத்துக்குவாயோ, அதேமாதிரி, உன்னுடன் படிக்கும் மாணவியரையும் பாத்துக்கணும்.
♥எந்த பெண்ணையும் கேவலப்படுத்தக் கூடாது; பெண்களை மட்டமாக பேசும் நண்பர்களுடன் சேரக் கூடாது. முடிந்தால், அவங்கள திருத்து.
♥உன் நண்பர்களிடமும், நான் சொல்லும் கருத்துகளை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு புரிய வைக்கணும். எல்லா ஆண் பிள்ளைகளும், பெண்களை புரிந்து, மதிக்கணும்'ன்னு அடிக்கடி அவன் கிட்ட சொல்றேன்.
♥இதனால், 'டீன் -ஏஜ்' வயதில் அவர்களுக்குள் உண்டாகும் பிரச்னையை எளிதாக சமாளிக்க முடியும்...' என்றாள், தோழி.
இதேபோல், ஆண் பிள்ளையை பெற்ற அனைவரும் நடந்தால், பிற்காலத்தில், பாலியல் பிரச்னைகள் மற்றும் வன்கொடுமைகள் நிச்சயம் குறையும். இது, உளவியல் ரீதியான உண்மையும் கூட!
0 Comments
Thank you