♥பெண்களின் ஒன்பது விதமான குணங்கள்
♥அன்பு, கருணை, தாய்மை, தைரியம், அழகுணர்வு, கலை உணர்வு, கர்வம், கனிவு போன்ற ஒன்பது விதமான குணங்கள் எல்லா பெண்களிடமும் இருக்கவேண்டும்.
♥இத்தனை தன்மைகளையும் கொண்ட பெண்களால்தான் இந்த உலகில் சிறப்பாக வாழ முடியும்.
♥இந்த ஒன்பது குணாதிசயங்களும் தங்களிடம் இருக்கிறதா என்று பெண்கள் ஆத்மபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று தங்களிடம் இல்லாவிட்டால் அந்த குணத்தையும் உருவாக்கி முழுமை நிறைந்த பெண்களாக தங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
♥#அன்பு, பெண்மைக்கு பெருமை சேர்க்கும் மிகப்பெரிய சொத்து. பெண்களிடம் எப்போதும் அன்பு வற்றாத ஜீவநதிபோல் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும்
♥#கருணை என்றாலே நமக்கு கடவுளும், தாயும்தான் நினைவுக்கு வருவார்கள். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கருணையின் வடிவம்தான். பெண் எப்போதும் கருணைமிக்கவளாக இருக்கவேண்டும்
♥#தாய்மை பெண்களின் தனிப்பெரும் சொத்து. தாய்மை உணர்வால் பெண், எல்லா உயிர்களையும் தன் உயிராக நினைக்கும் பக்குவ நிலைக்கு உயர்கிறாள்.
♥பெண்களிடம் கருணை, கனிவு, அன்பு போன்ற அனைத்தும் இருந்தாலும் அவர்கள் அநீதிகளைக் கண்டால் சினந்தெழுந்து அதர்மக்காரர்களை அழிக்க தயங்கக்கூடாது
♥பெண்களிடம் எப்போதும் போராட்டக்குணம் இருந்து கொண்டிருக்கவேண்டும்
0 Comments
Thank you