🌺 வலிகள் சொல்ல வார்த்தைகள் ஏது..😢
🌺"மங்கையாய்ப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்"மாம்.
ஆனால் அவள் மனவேதனைகளை யாரறிவர்.
🌺 அம்பை, அரிவை, மங்கை, மடந்தை, பேதை, பெதும்பை, பேரிளம்பெண் என அவள் பருவங்கைப் பகுக்கின்றனர்.
ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் அவள் படும் பரிதாபங்களை யாரறிவர்.
🌺 பக்குவம் அடைந்துவிட்டாள் என்று பலர்கூடி அர்ச்சதை தூவி ஆசீர்வதிக்கின்றனர்.
ஆனால் சில ஆண்கள் முன் அவள் அச்சமின்றிச் அடிவைத்து தைரியமாக நடந்து செல்கிறாளா என்பதை யார் உணர்வர்.
🌺 எல்லோரையும் அனுசரித்து மலர்ந்த முகத்துடன் உபசரித்து வரவேற்கிறாள் பெண்.
ஆனால் சந்தர்ப்பம் பார்த்து அந்த மலரைக் கசக்கிவீசக் காத்திருப்போரிடம் அவள் போராடுவதை யாரறிவர்.
🌺 அன்னையின் அன்பிற்கு நிகர் எதுவுமில்லையென வசனம் பேசுவர்.
ஆனால் முதுமையில் தனிமையில் அவள்படும் துன்பம் எந்தப் பிள்ளை மனம் உணரும்.
🌺 பெண்ணின் பெருமைகள் கூறிப் போற்றத் தேவையில்லை. பண்பான புரிதலுடன் அவளிடம் கண்ணியம் காத்திடுங்கள் அது போதும்.
🌺 பெண் வன்முறைக்கு எதிராகக் கொடிபிடித்துப் போராட்டம் நடத்தத் தேவையில்லை. கொஞ்சம் பொறுப்புடன் சமூகத்தை வழிநடத்துங்கள் அது போதும்.
🌺 பெண்ணின் பலம் ஆரோக்கியமான ஆணின் அன்பினால் உருவாகுவதே.
ஆணின் பலம் ஒழுக்கமான தாயன்பின் வளர்ப்பில் உருவாகுவதே.
#கொரோனாவின்_கொடுமையிலும்_சிலர்_குணங்கள்_மாறவில்லை😢
0 Comments
Thank you