♥#மறுமணம்...
♥ஆணிற்கொரு மறுமணம் என்றால்..
வயதில்லை எந்த ஒரு தடையில்லை. சமுதாய பிரச்சனையும் இல்லை.
இறந்த மனைவியின் நினைவில்லை அவள்
இல்லை யென்ற வேதனை இல்லை...
♥பெண்ணிற்கு மறுமணம் என்றால்.. மட்டும்
இறந்தவன் நினைவு வந்து விடும் அவன்
குடும்பம் தழைக்க ஓர் வாரிசு இல்லை யென்ற வருத்தம் வந்து விடும்.. சமூக கௌரவம் வந்துவிடும்...
♥மூன்று மாத வாழ்க்கையில்
மூளைச்சாவில் கணவன் போனால்..
மூலையில் அமரவைத்து..
மூக்குச் சிந்தி செல்லும் கூட்டம் சொல்லுது..
வாரிசு இல்லை.. இறந்தவன் நினைவின்றி உடலுக்காக அடுத்தவனை கைப்பிடிக்கிறாளென்று...
♥பிள்ளையொன்று பிறந்து விட்டால்
பிரிதொரு வாழ்க்கை அமைக்க நினைக்குமோ இக்கூட்டம் .
பிள்ளைக்காக வாழ்ந்திடு பிள்ளைக்காக வாழ்ந்திடு என்றுச் சொல்லி தங்கள் மகிழ்வைக் கூட தளர்த்திடாது நகர்ந்துச் செல்லும் கூட்டம்.. சொல்லுது இறந்தவன் நினைவு.அவளிற்கு இல்லையென்று.
♥இறந்தவனை மட்டுமே நினைந்திருந்தால்
இவள் வாழ்க்கை மீண்டிடுமோ...
இல்லை குழந்தையொன்று தான் பிறந்திட்டால்... குடும்பமாக ஆகிடுமோ..??
♥கண்ணீரில் கரைந்தபடி காலமெல்லாம் இவள் வாழ கலகலவென சிரித்தபடி
செல்லும் கூட்டம்... அடுத்த சோலி பார்க்க
மூலையில் அமர்ந்தவள் மீண்டுமொரு
மாலையேந்தினாள் மட்டும்
மூலைக்கு மூலை நின்று பேசுது கதை..
♥இல்லாமல் போனவனுக்காக இவள்
இடிவிழுந்த மரமாகா பட்டுப் போக வேண்டுமோ..?? துளிர்த்திடல் ஆகாதோ..??
இறந்தவன் குலம் வாரிசற்று போனதற்காய்.. இவள் குலம் தழைக்க கூடாதோ ..?? பேசும்... மூடர் கூட்டம்...
♥வாரிசுக்காக பெண்களின் வாழ்க்கையை பாழாக்காது.. வாழவையுங்கள் மீண்டும் வாழ்வழித்து..!! வாழச் சென்றால் வாழ்த்திடுங்கள் வழி மறைக்காது..!!!!
0 Comments
Thank you