♥பெண் பிறப்பின் வலிகள்
யாருக்கும் தெரியுமா ??
சொல்கிறேன் கேளுங்கள்...
♥ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தால்
அவள் அந்த குடும்பத்தின் #சாமி ஆவாள்
♥நாள் போக்கில் வளர்ந்து
சிறு வயதில் அவள் காண்பது
மட்டுமே அவள் வாழ்வின் சந்தோசம்
வயதுக்கு வந்த பருவம் வந்துவிட்டால் அன்றோடு பாதுகாப்பு எனும் சிறையில் அடைக்கப்பட்டு விடுகிறாள்
♥அவள் சந்தோசம் ஆசை எல்லாம்
அன்றோடு தொலைந்து போகிறது
ஏன் தொலைந்து போகிறது
வெளியில் அவள் செல்லும் போது
அவள் கற்புக்கு ஏதோ ஒரு ஆபத்து
ஆகிவிடுமோ என்ற பயம்...
♥ ஏன் பெண் பிள்ளையாய் பிறந்தோம்
என்றும்... நம் மனதை யாருமே புரிந்து கொள்ள வில்லையே என்றும்
அவள் மனம் ஏமாற்றம் அடையவில்லை
தன்னை பாதுகாத்த தாய் தந்தை
சந்தோஷத்திற்க்கே வாழ்ந்து விடுவோம்
என்று
♥அவர்கள் காட்டும் ஆணிற்கு
தலை குனிந்து தாலி ஏற்கிறாள்...
அதோடு முடிய போவதில்லை
அவள் சிறை.... பெற்றோருக்காக வாழ்ந்தவள்... இப்போது கணவருக்காகவும் வாழ்கிறாள்...
♥தாய்மை என்ற பட்டம் பெறுகிறாள்
குழந்தை பெறும் போது
சுகப் பிரசவத்திலும் உயிர் பிழைத்து வருகிறாள்... சிசேரியன் செய்தாலும் உயிர் பிழைத்து வருகிறாள்...
♥மாறுகிறது அவள் வாழ்க்கை
தன் பிள்ளைக்காக.. மாற்றுகிறது அவள் வாழ்க்கையை பிள்ளைகளின் எதிர்காலம்
பெற்றோர் மற்றும் கணவனுக்காக வாழ்ந்தவள் இப்போது பிள்ளைகளுக்காகவும் வாழ்கிறாள்...
♥உயிர் உள்ள வரை தன் பெற்றோர் கணவன் பிள்ளையின் சந்தோசத்திற்கு வாழ்கிறாள் இதில் அவளுக்கான சந்தோசம் எதுவும் இல்லை ... அவர்களின் சந்தோசமே அவளின் சந்தோசமாக வாழ்கிறாள்... வாழ்ந்து மடிகிறாள்.... குடும்பம் எனும் சிறையிலேயே.....
♥பெண்ணை தவறாய் எண்ணாதீர்கள் அவள் வலியோடு வாழ்ந்து பிறர் சந்தோஷத்திற்க்காக சிரித்து வாள்பவள்
அவளின் உணமையான அன்பில்
வாழ்ந்துவி்டுங்கள் அவளுள் உன் தாய்முகம் காண்பாய்
#பெண்மையை_நேசி
0 Comments
Thank you