காமப் பேய்களின்
கோராத் தாண்டவத்திற்கு
இந்தப் புகைப்படம்😓😓
மனநிலை பாதிக்கப்பட்ட
இவளின் மடியிலோ
மாபெரும் கணம்...ஆம்
அவளோ நிறைமாதக் கர்ப்பிணி😓..
மடி சுமையின் மர்மம் தான் இவளரிவாளோ???
தான் தாயென்றே அறியாத பாவப்பட்ட பச்சிளம் குழந்தை தானே
இந்தப் பாவை அவள்!!!
சுயநினைவு இல்லாத பெண்ணிடம்
சுகம் தேடி அலையும் கோரப்பேய்கள்!!
கல்லுக்கும், மரத்துக்கும் புடவை கட்டினால் கூட விட்டுவைக்காத இந்நாட்டில் இவள் மட்டும் எப்படித்
தப்பிப் பிழைப்பாளாம்....
தாகம் தீர்க்கவே இவளுக்கு
வழி தெரியவில்லையே...
இவளிடம் போய் மோகம் தீர்த்துக் கொண்டுள்ளனரே
மானுடப் பேய்களிங்கே!!
பசி தீர்க்கத் தெரியாதவளிடம்
வயிற்றை நிரப்பிச் சென்றுள்ளானரே மகாபாவிகள்😓
மாதவிடாயும் தெரியாதவள்..
தான் மங்கையென்றும் அறியாதவள்...
சுய நினைவிருந்தும், பாதுகாப்பு வேலியிலிருக்கும் எங்களையே
மேயும் கறுப்பாடுகள்.....
எப்படி வாழப்போகிறாய் நீயும்
இந்த பூமியில்?????................✍️
0 Comments
Thank you