♥உங்கள் பிள்ளைகளுக்கு வயதுவர கடமைக்கு திருமணம் முடிக்கும் பெற்றோர்களே... திருமணம் முடிந்ததும் கடமை முடிந்தது என ஒதுங்க வேண்டாம்......
♥பிறந்த சிறு வயதில் கை பிடித்து நடை பழக்கும் போது கீழே விழாமல் இருக்க உங்கள் பிள்ளைகளை தாங்கி கொண்ட நீங்கள்..... வாழ்க்கை துணையுடன் வாழ்க்கையின்அடி எடுத்து வைக்கும் ஆரம்ப காலங்களில் ஆதரவாக கை கொடுங்கள்.......
♥இங்கு எல்லா ஆண்களும் மனைவியை சந்தேகிக்காமலும்..... மதுபோதைக்கு அடிமையாகமலும்...... வேறு பெண்களை நாடாமலும் இருக்கும் உத்தமர்களாக திருமண சந்தையில் கிடைப்பதில்லை எல்லா பெண்களுக்கும்......
♥திருமணம் முடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற தப்பு கணக்கில் ஆடம்பரமாய் அரங்கேறிய திருமணங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் விவாகம் விவாகரத்து வரை செல்கிறது......
♥எப்படி திருத்த என்பது தான் கேள்வியாகவே இருக்கிறது....
விடை தான் கிடைப்பதில்லை...
அன்பால் திருத்திவிடலாம் என இங்கே விவாதிக்க வருபவர்களுக்கு நானும் கேட்கிறேன் ஆணை பெற்று வளர்த்த பெற்றோர்கள் அன்பை பொழிய முடியாதா???? அதில் திருந்த தான் முடியாதா!!!!!.....
♥குடி போதையில் கேட்கும் ஒவ்வொரு சந்தேக கேள்விகளுக்கும் வாழ விருப்பம் இன்றி பெற்றோரிடம் சொல்லவும் முடியாமல் தனிமையில் அழும் பெண்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழவெட்டியாய் தந்தை வீட்டிற்க்கு தலைகுனிவு வந்து விடாமல் கணவனுடனான விருப்பமற்ற வாழ்க்கையை.....
♥கொஞ்சம் அக்கறை.... கொஞ்சம் ஆதரவாய் நானிருக்கிறேன் என பெற்றோர்கள் நீங்கள் இருப்பதாக உண்மையாக இல்லாவிட்டாலும்...
பொய்யாகவாவது காட்டி விடுங்கள.....
♥ஊரு ரெண்டு பட்ட நிலையில் வாழ்பவளுக்கு வேறு பிரச்சனைகளும் காத்திருக்கிறது சமூகத்தில்......
♥ஆம்... கணவன் சரியில்லை..... பெற்றோரின் ஆதரவும் இல்லை..... நான் இருக்கிறேன் உனக்கு கடைசி வரை என எவனோ ஒருவனின் இடைஞ்சல் அவனின் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள வம்பிழுக்கும் கயவனையும் சமாளிக்க வேண்டியுள்ளது சில பெண்களுக்கு......
இவை அனைத்திலும் குறை சொல்லபடுவது பெண்களை தானே தவிர.... ஆண்மீதான தவறுகள் சுட்டி காட்ட படுவதில்லை.....
♥இங்கு ஆரோக்கியமான குடும்ப சூழல் தேவையே தவிர...... அலைகழிக்கும் விவாகரத்து குடும்பம் இல்லை.....
♥பெற்றேன் ..... வளர்த்தேன்.....
கட்டிக்கொடுத்தேன்..... கடமை முடிந்தது என எண்ணுபவர் நீங்கள் எனில் சற்று கடின மனதுடன் எழுதுகிறேன் கடைசி வரை உங்கள் மகளாகவே வளர்த்துவிடுங்கள் ஒரு கன்னியாகவே......
♥இவை அனைத்தும் நான் வளர்ந்த கிராமத்தில் நடந்தவைகளின் பின்னால் இருக்கும் நிஜமுகங்கள் தான்.....
♥கற்பனை என ஏளமாய் பேச வருபவர்களுக்கு ஒன்று மட்டுமே......
சற்று உற்று நோக்குங்கள் உன் உறவை சுற்றி இருக்கும் பெண்களின் வாழ்வில் இது ஒருவருக்கு கூட நிகழவில்லை எனில்
விவாதிக்க வரலாம் கீழே......
♥இது எதோ பெற்றோருக்கான பதிவு தானே என எண்ணம் கொள்ளும் நாம் நாளை பெற்றோர் தானே???.....
நம் உடன் பிறந்த சகோதரிக்கு கூட நேரலாம் எவர் கண்டார்??????.......
0 Comments
Thank you