♥உடம்பு சரியில்லாத யாரையாச்சும் பார்க்கப் போனோம்னா.. ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கிட்டுப் போனமா, ஆறுதலா..தேறுதலா நாலு நல்ல வார்த்தை பேசிட்டு ஒரு பத்து நிமிஷம் கூட இருந்துட்டுக் கிளம்பினமான்னு இருக்கணும்..
♥அதை விட்டுட்டு, "இப்படித்தான்... எங்க மச்சானுக்குக் கால்ல அடிபட்டு, சரியா கெவுனிக்காம, காலையே எடுத்துப்புட்டாங்க கடைசிலே... "
♥"எங்க அக்கா ஒருத்தங்களுக்கு காச்சல் வந்து, அது டெங்குன்னு கண்டுபுடிக்கறப்ப கை மீறிப் போச்சு.. செத்தே போய்ட்டாங்க போ... "
♥"இதென்ன இந்த ஆஸ்பத்திரிக்கு வந்துருக்கறீங்க... ?? காசப் புடுங்கறதிலியே குறியா இருப்பாங்க. எங்க சித்தி ஒருத்தங்களுக்கு டெஸ்ட் ரிப்போர்ட்ட மாத்திக் குடுத்துட்டாங்க. தப்பா ட்ரீட்மெண்ட் பண்ணி, கிட்னி வேலெ செய்யாம, இப்ப அவங்க ஆஸ்பத்திரிக்கும் ஊட்டுக்குமா அலையா அலையறாங்க.. "
♥" எங்க அம்மாயிக்கு இதே மாதிரி ஒரு சின்னக் கட்டி வந்து.... இந்த டாக்குட்டருங்க செரியாக் கெவுனிக்காம.., அது பெரிய பிரச்சினை ஆகி, படாத கஸ்டம் பட்ட்ருச்சு..."
♥இப்புடி டிசைன் டிசைனாப் பயப்படுத்தி உட்டுட்டு அவங்க பாட்டுக்குக் கெளம்பிப் போயிருவாங்க....
♥இதையெல்லாம் கேட்டு, கண்டதையும் கற்பனை பண்ணி .... மனசக் கொழப்பி, உடம்பையும் இன்னும் கெடுத்துக்கிட்டு, வீணாப் போகும் அந்த நோயாளியின் நொந்த மனசு.
♥அதனால, இனிமே யாராச்சும் உடம்பு சரியில்லாதவங்களைப் பாக்கப் போறப்ப, இப்படியெல்லாம் எதிர்மறையா எதையாச்சும் உளறிக் கொட்டிக் கிளறி மூடாம...
♥"எல்லாம் சீக்கிரமா சரியாயிடும்.... கண்டதையும் நெனச்சு மனச உழப்பிக்காதீங்க.. கவலைப்படாதீங்க...."ன்னு
♥நம்ம திருவாயைத் திறந்து நம்பிக்கையா நாலு நல்ல வார்த்தை பேசீட்டு வருவமாம்...
0 Comments
Thank you