♥ஒரு பக்க கதை
♥கணேசன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப்
பார்த்து, ‘நாட்டு நடப்புகளை தினமும் தெரிஞ்சுக்கணும்.
அதனால் நாளையில இருந்து வீட்ல பேப்பர் போடச்
சொல்லிட்டேன். தினமும் பேப்பர் படிங்க’ என்றார்.
♥பேப்பரை படித்த மனைவி சாந்தி, ‘பார்த்தீங்களா
அந்த ஊரு பொண்ணு! புருஷன் ஆபீசுக்கு போன
சமயம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரன் கூட
தொடர்பு வச்சிருக்கா…’ என்றாள்.
♥மகள் திவ்யா, ‘அந்த ரவுடி கூரியர் பாய் மாதிரி
அந்த வீட்ல போய் கொள்ளையடி்சிட்டு, வீட்டுக்
காரம்மாவையும் அநியாயமா கொலை
பண்ணிட்டான் பாருங்கப்பா…’ என்று வருத்தப்பட்டாள்.
♥ஒரு மாசம் கழித்து பேப்பர்காரன் சந்தா கேட்டு வந்தான்.
‘இந்தாப்பா பணம் இனி பேப்பர் போடாதே’ என்றார்
கணேசன்.
‘என்ன சார் என்னாச்சு?’
♥வீட்ல உள்ளவங்க பேப்பர்ல கள்ளக்காதல், கொலை,
கொள்ளை, கற்பழிப்பு இந்த மாதிரி விஷயங்களைத்தான்
சுவாரஸ்யமா படிக்கிறாங்க. இது அவங்க மனசை
பாதிச்சுடும். அதனால் இனி பேப்பர் போடவேண்டாம்’
என்றார் கணேசன் தீர்க்கமா.
0 Comments
Thank you