#அவள்_கதைத்துக்கொண்டிருந்தாள்...
" எவனுக்கோ செட்டாகிட்டுது போல "
" கனநேரமா றோட்லை பல்லை காட்டுது ஐட்டம் போல இருக்கு "
" ஆளும் அவேன்ர நடையும் "
" எங்கையோ ரூம் போட போகினம் போல "
" போன் பில் எவன்ரி கட்டுறான் "
" கொறி பூசிறா போல "
" உந்த போனொண்டு வந்து இப்ப பொடி பெட்டையெல்லாம் படுற பாடிருக்கே "
" ப்ப்ப்பா... "
" எனக்கும் நம்பரை தந்தால் கதைக்கலாம் கன நேரம் "
ஆயிரம் வார்த்தை கடக்கும் அந்த வீதியோரம்
அவள் கதைத்துக்கொண்டிருந்தாள்
தொலைபேசியில்
கதைத்துக்கொண்டு மட்டும் தான் இருந்தாள்
வெளியூரிலிருக்கும் தந்தையுடன்...
மீள்...
...யாரோ...
0 Comments
Thank you