ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆணை பிடிக்கும்..?
அவன் அவளிடம் நான் ஆண் என்கிற கர்வம் காட்டாத மென்மை பிடிக்கும்.
அந்த மென்மை அவளிடம்மட்டுமே காட்டும்விதம் பிடிக்கும்.
அடுத்தவரிடம் அரசனாய் தன்னிடம் அடிமையாய் இருக்க தேடுவாள்.
அவள்மேல் அவன் வைக்கும் நம்பிக்கை பிடிக்கும்.
அவளை ரசிப்பது பிடிக்கும்.
*அவளை மட்டுமே ரசிக்கணும் அல்லது குப்பை தான் மவனே நீ வேற எந்த தகுதி இருந்தாலும்.🤣
ஆணாதிக்கம் அறவே பிடிப்பதில்லை அவள்களுக்கு.
அவளை மட்டுமே கொண்டாடணும் அவனை பிடிக்கும்.
அவளின் மனதை உணர்ந்து அவளது சின்ன சின்ன அசைவுகளை கூட புரிந்துகொள்ளும் அவனை ரொம்பவே பிடிக்கும்.
அவளுக்காக அவன் விடும் ஒரு துளி கண்ணீர் பிடிக்கும்.
அவன் அன்பு பிடிக்கும்.
எத்தனை மென்மையாய் அவளுடன் நடந்தாலும் அவளுக்கான அவமானத்தில் நெஞ்சை நிமிர்த்தி அடுத்தவரோடு பேசி சண்டை போடும் அவனை ரொம்ப பிடிக்கும்.
அவளுக்காக உருகி எழுதும் கவிதை பிடிக்கும்.
அவள் சொல்வதை நம்பும் அவள் பேச்சுக்கேட்கும்குழந்தை பேன்ற அவனை பிடிக்கும்.
அவளை மட்டுமே உயிராய் நினைத்து வாழ்வது பிடிக்கும்.
அடுத்தவர் எது சொன்னாலும் தன்மனதுக்கு அவளை பற்றி தெரந்ததே உண்மை என சொந்தமாய் யோசிக்கும் அவனை பிடிக்கும்..
அவளுக்கான சுதந்திரத்திலும் அவள் தனக்காக இருப்பாள் என்று நம்பும் ஆணை மிகப்பிடிக்கும்.
அவளின் சின்ன சின்ன தோல்விகளில் தட்டிக்கொடுத்து தன்னம்பிக்கை தரும் ஆணை பிடிக்கும்.
பொய்யில்லாது அவளிடம் உண்மையாய் இருக்கும் ஆணை மொத்தமாய் பிடிக்கும்.
ஸ்ஸப்பா மூச்சு வாங்குது.
மானே தேனேன்னு வழிஞ்சாலும் தன்மேல நம்பிக்கையில்லாத எவனையும் அவளுக்கு பிடிக்காது.
தன்னை விட்டு எவளையாவது பார்க்கிற ரசிக்கிறவனை பிடிக்காது.
அடுத்தவள் உடம்பை ரசிக்கிறவனை பிடிக்காது.
தான் காட்டும் அன்பை காதலை மதிக்காத அவளை மதிக்காத அவமானப்படுத்தும் ஆணை பிடிக்காது.
அவளுக்கு வரும் அவமானத்தை , வலியை துளியும் உணராத ஆணை பிடிக்காது.
இதெல்லாம் ஒரு பெண் பழகியபிறகு ஒரு ஆணிடம் சொன்னேன்.
பழகாம ஒரு ஆணை பிடிக்கிறதெண்டா தோற்றம் தான்.
அது அதிகமான பெண்களுக்கு நிஜமாவே மனதில் இல்லை.
தோற்றம் என்பதை தாண்டி அவள்கள்தேடுவது வேறு.
பெரியார் கிழவன் அந்த வயதிலும் ஆணழகன் தான் நமக்கு.
மீசைக்கார சுப்ரமணியன் பேரழகன்தான் நமக்கு.
இப்படி இன்னம் பலர்.
அவள்களை அவள்களாக பார்க்க நினைக்கும் ஆண்கள்பேரழகன்கள் தான்.
அவள்களை தங்கள் போகப்பொருளாவும் தமக்கு வாய்த்த அடிமைகளாவும் பார்க்கும் ஆண்களை பிடிக்காது.
குட்டியாய் பொசிசிவ்னஸ் ரொம்ப பிடிக்கும்.
ஆனால் சந்தேகம்பிடித்த ஆணை சுத்தமாய்பிடிக்காது.
இப்படி ஏகத்துக்கு..
காசு பணம் வாழ்வுக்கு தேவை தான்.ஆனால் அவள்கள் அதை மட்டுமே வைத்து ஆண்களை பார்ப்தே இல்லை.
இந்த தகுதிஎல்லாம் என்கிட்ட இருக்கு என்று எவனும் சொன்னாலும் அவ நம்பமாட்டா.அவளா பாத்து கண்டுகொண்டாலே உண்டு
🏃♀️🏃♀️🏃♀️🏃♀️
0 Comments
Thank you