HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

இதெல்லாம்_ஒரு_பெருமையா?

♥#இதெல்லாம்_ஒரு_பெருமையா?
சமீபத்தில், டீ கடை ஒன்றில் நண்பர்களுடன், தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அருகே, நண்பர் குழாம் ஒன்று, டீ குடித்தபடி நின்றிருந்தனர். அதில், ஒரு இளைஞர், மற்றவரை பேச விடாமல், தன்னைப் பற்றியே பெருமை பேசியபடி இருந்தார்.

♥பழைய பைக்குகளை வாங்கி, விற்கும் தரகர் தொழில் செய்யும் அவர், அத்தொழிலில் உள்ள பொய் புரட்டுகளையும், உதவாத வண்டியை, யாரோ ஒருவர் தலையில் கட்டியதை பற்றியும், பெருமையாக அடுக்கினார்.
முக்கியமாக, அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் செயின், மணிக்கட்டில் கட்டியிருந்த பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் போன்ற நகையெல்லாம், தவணை முறையில் வாங்கியதாகவும், தனக்கு ரெண்டு லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் பீற்றினார்.

♥எங்களைப் போலவே, இதைக் கேட்டு கொண்டிருந்த முதியவர் ஒருவர், 'தம்பி... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... இந்த, 'காம்ப்ளக்ஸ்' என்னோடது தான்; நான், கிராமத்தில் இருந்து, இங்கே வரும் போது, கையில பத்து ரூபாய் கூட கிடையாது. நாலு, 'டிப்போ'விலே, கமிஷனுக்கு பால் வாங்கி, கடைகளுக்கு ஊத்தினேன்; அதோட, டீக்கடையும் நடத்தினேன். 

♥பின், படிப்படியா அதை ஓட்டலாக மாத்தி, நேர்மையா சம்பாதிச்சேன்... என்னோட, ஆறு பிள்ளைங்களையும், கரை சேர்த்துட்டு, அவங்களுக்கு நிலையான சொத்தா, இந்த கடைகளையும் கட்டி, வாடகைக்கு விட்டுருக்கேன். எல்லாமே, உழைப்பு மற்றும் சேமிப்பு தான். ஒரு ரூபாய் கூட கடன் வாங்கல... நீ என்னடானா, தொழில்ல ஏமாத்தினதையும், கடன் பட்டதையும் பெருமையா சொல்லிட்டு இருக்கே...' என்றார்.

♥இதைக் கேட்டதும், அந்நபருக்கு முகத்தில் ஈயாடவில்லை. அசடு வழிந்தபடி, தன் இருசக்கர வண்டியை கிளப்பி சென்று விட்டார். ஆக்கப்பூர்வமான விஷயங்களை, மற்றவரிடம் பேசினால், அதனால், நன்மை ஏற்படும். மாறாக, வீண் பெருமை, வெட்டி பந்தா பேசுவது, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதோடு, மற்றவர்களையும் மறைமுகமாக கெடுக்கும் செயல் என்பதை இவரைப் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
— பி.சதீஷ்குமார், மதுரை.

Post a Comment

0 Comments