♥திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் எதற்காக தெரியுமா?
♥#முதல் அடி :
பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
♥#இரண்டாவது அடி :
ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
♥#மூன்றாவது அடி :
நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
♥#நான்காவது அடி :
சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
♥#ஐந்தாவது அடி :
லட்சுமி கடாட்சம் பெற வேண்டும்.
♥#ஆறாவது அடி :
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
#ஏழாவது அடி :
♥தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
♥ இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சிநேகிதம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும்போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள்.
♥ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போகவிட்டு விடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.
♥இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்துவிடும் என்பது ஒரு சூசகமான விஷயம்.
♥இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும்.
0 Comments
Thank you