♥#வேண்டும்_சொந்தங்கள்!
கடந்த சில வாரங்களுக்கு முன், நோய்வாய்ப் பட்டிருந்த என் உறவினர் இறந்து விட்டார்; அவருக்கு, குழந்தைகள் கிடையாது. உயிருடன் இருக்கும் போது, உறவினர் யாரையும் மதிக்க மாட்டார்; அவர் மனைவியும், சொந்த பந்தங்களிடம் நெருங்கி பழக மாட்டார்.
♥உறவினர் இறந்ததை கேள்விப்பட்ட சொந்தங்கள் எல்லாரும் ஒன்று கூடி, இறுதி சடங்கை, மிகச் சிறப்பாக செய்தனர்; மேலும், ஒவ்வொருவரும் ஒரு வேலையை தாங்களாகவே இழுத்துப் போட்டு, பதினைந்தாம் நாள் காரியத்தையும் வெகு சிறப்பாக செய்தனர்.
♥இதையெல்லாம் பார்த்த, உறவினரின் மனைவி, மிகவும் நெகிழ்ந்து போனார்.
'இப்படிப்பட்ட அருமையான உறவுகளையெல்லாம், என் கணவர் பேச்சை கேட்டு, ஒதுக்கி, உறவுகளின் அருமை புரியாமல் இருந்து விட்டேனே...' என, கண்ணீர் விட்டு அழுதார்.
♥உறவினர்களை அனுசரித்து, அவர்களோடு கூடி வாழ்ந்தால், வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். அவர்கள் தான், நாம் துன்புறும் காலங்களில், துடிதுடித்து ஓடி வந்து, நம் துயர்களை களைவர்!
— மருத.வடுகநாதன், வேதாரண்யம்,நாகை.
0 Comments
Thank you