♥ஒருவன் எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருந்தான். அவனை பார்த்துக் கொண்டே இருந்தவன், நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருக்கிறாயே எதற்கு? என்று கேட்டான். அதற்கு அவன் நான் குளிர் காய்வதற்கு என்று கூறினான்.
♥கேட்டவனோ... நீ குளிர் காய்வதை நான் பார்த்ததே இல்லை என்றான். அதற்கு அவனோ சுள்ளி பொறுக்கவே நேரம் கிடைக்கவில்லை... நிறைய சுள்ளி பொறுக்கி சேமிக்க வேண்டும் இதில் குளிர் காய எங்கே நேரம்? என்றான்.
♥நாட்டில் பெரும்பாலானோர் இப்படிதான் இருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது வாழ்க்கையை சுகமாக அனுபவிக்கதான். ஆனால், சிலர் பணம் சம்பாதிப்பதையே தங்கள் குறிக்கோளாக வைத்திருக்கின்றனர்.
♥குடும்பத்திற்காக சம்பாதிக்கிறேன் என்று, அவர்கள் குடும்ப வாழ்வை அனுபவிப்பதே இல்லை. மனைவியிடமோ, குழந்தைகளிடமோ உறவாடி மகிழ நேரமில்லை என்கிறார்கள்.
♥எவனொருவன் தூங்க வேண்டிய நேரத்தில் எந்த கவலையும் இல்லாமல் ஆனந்தமாக தூங்குகின்றானோ, அவன்தான் உண்மையான பணக்காரன்.
♥அளவோடு உழைத்து, வாழ்க்கையை ஆனந்தமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.
0 Comments
Thank you