HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மாமா ஆகிய நான் மம்மு ஆகிய என் மனைவிக்கு எழுதும் காதல் மடல்...

மாமா ஆகிய நான் மம்மு ஆகிய என் மனைவிக்கு எழுதும் காதல் மடல்...

என் அன்பு மனைவியே ..

என் நீண்ட நாள் ஆசைகளடி இது..

முட்டால் தனமான ஆசைகளாக உனக்கு தோன்றலாம் ஆனால் இதுவே உன்மையடி..

நாம் 60 வயதை அடையும் முன் இறந்தால் பாதிப்பு இல்லை..

ஆனால் நம் பிள்ளைகள் நம்மை கவனிக்க தவறி ..

நம்மை அனாதைகளாக மாற்றி தனியே தவிக்க விட்டால் உணவிற்கு கூட கையேந்த விட்டு விட்டால் என்ன பண்ணுவது...

அதற்கு தான் உன் பெயரில் தனியாக இந்த இடம் வாங்கியுள்ளேன்..

இதில் சிறு குடிசை பின்னால் ஒரு தோட்டம் ..

அதில் நம் உணவுகளை நாமே  தயாரித்து கொள்ளலாம்..

அப்போதும் உன்னை நான் கஷ்டபடுதாமல் நானே உனக்கு சமைத்து தர ஆசை..

நம்மை நம் பிள்ளைகள் விட்டு விட்டாலும் நாம் வளர்த்த இந்த அழகு புறாக்கள் , கிளிகள், குருவிகள் நமக்கு போதுமடி செல்லமே...

அதோ பார் உனக்கு பிடித்த வெள்ளை புறா அழகாக உன்னை பார்த்து கூவி வருகிறது..

நான் வளர்த்த கிளி சொல்வது என்னவோ என்னவளின் பெயரை ..

சிட்டு குருவியின் சத்தம் காதில் இன்னிசை பாடும் நேரம்...

இந்த இயற்கை வளங்கள் போதுமடி நமக்கு.. 

நம் பிள்ளைகள் சந்தோசமாக இருக்கட்டும் நாம் அவர்களை தொள்ளை செய்ய வேண்டாம் ..

அவர்கள் நம்மை முதியோர் இல்லத்தில் சேற்கும் முன் நான் உன்னை இங்கு அழைத்து வந்து விட்டேன்..

100 வயது ஆனாலும் உன் மீது நான் கொண்ட காதல் ஒரு போதும் குறையாதடி என் கண்மணி..

அப்போதும் நான் உன்னை கொஞ்சும்போது..

நீ என்னை செல்லமாக திட்டுவது , டேய் கிழவா சும்மா இருடா.. 

ஆனந்தமாய் நம் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருக்கும் போது ...

ஒரு நாள் ..

தோட்டத்தில் கட்டிலில் பறவைகளோடு ..

நான் உன் மடியில் படுத்து நீ எனக்கு தலை பார்க்கும் போது ..

உன் கண் முழுவதும் நான் மட்டும் நிறைந்திருக்கும் போது..

நான் உன்னிடம் ஓய்  மம்மு உனது  ஆசை என்ன என்று கேட்க ..

நீ சொல்வாய் நம் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று..

நானும் அவர்களுக்கு தகவல் அனுப்ப ..  

அவர்களும் நம்மை கடமைக்கு பார்க்க வர  பேர குழைந்தைகளை கொஞ்சி விளையாட ...

தாவி ஒடும் முயல்களோடு பிள்ளைகள் விளையாட அந்த நாள் இனிதே உன் ஆசை நிறைவேற ...

அடுத்த நாள் நீ என்னிடம் கேட்க்க 

டேய் கிழவா உனது ஆசை என்ன டா..

நான் சொல்வது..

 என் உயிரே...

இந்த நொடியே என் உயிர் போனாலும் உன் கரம் பிடித்து உன்னோடு ஒன்றாகவே நம் உயிர் போக வேண்டும்  அந்த நொடி நான் உன் மடியிலும் நீ என் நெஞ்சிலும் தலை வைத்து நம் உயிர் பிரிய வேண்டும் என்று..

நான் போன பிறகு உன்னை யாரும் பார்த்துக்க போவது இல்லை உனக்கு நான் எனக்கு நீ இதுவே என் கடைசி ஆசயடி என் மம்மு குட்டி மா..

சொந்தகள் நம்மை உதற, பிள்ளைகள் நம்மை பிரிய,

கடைசி காலத்தில் இந்த பறவைகளோடு வாழ..

நம் உயிர் பிரியும் போது பறவைகள் வானம் முழுவதும் வட்டமிட ..

அந்த நாள் நான் 

கடைசியாக உன்னிடம் சொல்லும் ஒரு வார்த்தை..

ஐ லவ் யூ டீ மம்மு பொண்டாட்டி.....

Post a Comment

0 Comments