HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நீங்களும் வாழலாம் 100 வயது வரை நீண்ட ஆயுளுக்கு எளிய வழிமுறைகள்

நீங்களும் வாழலாம் 100 வயது வரை நீண்ட ஆயுளுக்கு எளிய வழிமுறைகள்

வயது என்பது வெறும் எண் தான்.எத்தனை வருடம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம் என்ன சாதித்தோம் என்பதில் தான் மனித வாழ்வின் அர்த்தம் அடங்கியுள்ளது. ஒரு வீட்டில் இன்று ஒருவர் “என் தாத்தா எந்த நோயும் இல்லாமல் 100 வயது வரை வாழ்ந்து மறைந்தார்” இப்படி சொன்னால் அது எவ்வளவு பெரிய அதிசயம். இன்றைய கால மக்களால் ஏன் அப்படி வாழ முடியவில்லை. வாழ்க்கையை வாழ அவர்களுக்கு தெரிகிறது ஆரோக்கியம் பற்றிய அக்கறையும் இருக்கிறது.ஆனால் அதை பின்பற்றுவதில்லை என்பது தான் ஆக பெரிய குற்றச்சாட்டே.

நவீன மருத்துவம் நம் ஒவ்வொருவரின் ஆயுட்காலத்தையும் அதிகரித்து உள்ளது.ஆனால் ஆரோக்கியம் மட்டும் அதிகரிக்கவில்லை, அதற்கு மருத்துவத்தை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது.மாறி போயுள்ள நம் மோசமான வாழ்க்கை முறைக்கு அடிமையாகி உணவு, உடை, சூழல் என எல்லாவற்றிலும் நிகழ்ந்துள்ள சீர்கேடுகள் தான் இதற்கு காரணம்.

 
சரி ஆயுளை நீடிக்கும் மந்திரத்திற்கு ஏழு கடல் ஏழு மலை தாண்டி பல சிக்கல்களை கடந்து சாதிக்க வேண்டியதில்லை,அன்றாடம் வாடிக்கையாக செய்யும் செயல்களில் நம் உடல் பற்றிய அதன் ஆரோக்கியம் பற்றிய சிறிய அக்கறை மற்றும் மெனக்கெடலோடு அணுகினாலே போதும்.அதை செய்ய எளிய வழிகளை எடுத்து சொல்லும் கட்டுரையே இது.

முதலில் பசித்து உண்பது, தாகம் எடுக்கும் போது தண்ணீர் அருந்துவது,உடல் ஓய்வு கேட்கும் போது ஓய்வெடுப்பது ஆயுளை நீட்டிக்கும் முதல் வழி.
தினமும் ஒரு அரை மணிநேரமாவது மனசுக்கு பிடித்த விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கி மனம் மகிழ மகிழ அந்த விஷயத்தை அனுபவித்து ரசிக்க வேண்டும்.
தினமும் அலுவலக வேலையே என்றாலும் தோட்டத்திலோ, சமையலறையிலோ உடல் வியர்த்து வலிக்கும் வரை உழைக்க வேண்டும்.அதாவது உடலுக்கு இயக்கம் கொடுக்காமல் ஒரு நாளையும் நிறைவு செய்யக்கூடாது.
தியானம் யோகா இரண்டையும் நாளைக்கு ஒரு முறை குறைந்தது 10 நிமிடமாவது வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
நேர்மறையாய் மட்டுமே சிந்தியுங்கள்,செயல்படுங்கள். எதிர்மறை எண்ணம் உள்ளவர்களிடம் இருந்து முற்றிலும் விலகி விடுங்கள்.
மாதத்தில் ஒருநாளாவது எல்லா தொழில்நுட்டங்களில் இருந்தும் விலகி முழு வேலை நாளாக இருங்கள்.

 
மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆவது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாந்தி பேதி மருந்து வாங்கி உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.
ஆறு மாதத்திற்கு ஓரு முறை காடுகள் ,மலையேற்றம் என சிக்னல் கிடைக்காத இடங்களில் ஒரு சில நாட்களை செலவு செய்யுங்கள்.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்யுங்கள். மனம் உடல் மகிழ்வாய் இளமையாய் நீண்டகாலம் இருக்கும் .
வருடம் ஒருமுறையாவது இரத்ததானம் செல்கள் புதுப்பிக்கப்படும்.தவறாமல் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments