♥வாழ்க்கை தோல்வியா அழுங்கள்... வாய் விட்டு, சத்தம் போட்டு கதறிக் கதறி அழுங்கள்... உன் கண்ணீரோடு உன் காதலும் கரைந்து போகும்வரை அழு...
♥பின்பு உலகத்தைப் பாருங்கள்...
அந்த வாழ்க்கையையும் மீறி எத்தனையோ
அழகுகள், உணர்வுகள் உனக்காய் காத்திருக்கிறது வாழ்க்கை தோல்வியையும் தாண்டி எத்தனையோ பிரச்சனைகள்,
போராட்டங்கள், அழகுகளை ரசிக்கக் கற்றுக்கொள்...
♥பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்..
போராட்டத்தில் ஓட தெரிந்து கொள்..
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்... வாழ்வின் குறுகிய முன்னேற்றத்தை மனதில் கொள்...
♥பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்... வாழ்வு இறந்ததற்காக உயிரைச் சிந்தத் துணிகிறாய்.. திருமணம் புனிதமானதுதான் இல்லை என்று சொல்லவில்லை , புனிதமான எதுவும் உயிரை விலையாய் கேட்பதில்லை.
♥விலங்குகளை பலி கொடுத்து கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்.. நம்மையே பலிகொடுத்து.உயிரின் புனிதத்தை
கெடுக்கிறோம்..
♥திருமண தோல்வியா..? வாழ்க்கை உன்னை வெறுத்திருந்தால் நீ தேடிச் சென்ற வாழ்க்கையை மறந்து உன்னை தேடிவரும் வாழ்க்கையை அணைத்துக்கொள்..
♥வாழ்க்கை என்பது உனக்காக வாழ்வதற்கே என்பதைப் புரிந்துகொள் யாருக்காகவோ சாவதற்கு இல்லை...
வாழ கற்றுக் கொள்....
0 Comments
Thank you