HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

குழந்தை வளர்ப்பில் கவணம் தேவை

♥குழந்தை வளர்ப்பில் கவணம் தேவை

♥தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. ""பத்து பிள்ளை பெற்றவளுக்கு, தலைப் பிரசவத்தில் குழந்தை பெற்றவள் வைத்தியம் சொன்ன கதையைப்போல'' என்பதே அது. இன்றைய இளம் தாய்மார்களுக்கும் இளம் பாட்டிமார்களுக்கும் குழந்தை பிறப்பு, வளர்ப்பு குறித்து சில யோசனைகளைக் கூற வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

♥கூட்டுக் குடும்பங்கள் அரிதாகிவிட்டதால் வயதான பாட்டிமார்கள் உடன் இல்லாமல்  கர்ப்பிணிகளை அவர்களுடைய "நடுத்தரவயது'த் தாய்மார்கள் பார்த்துக் கொள்கின்றனர். அவர்களும் பிள்ளை பெற்று 20 ஆண்டுகள் கடந்துவிட்டபடியால் குழந்தை பிறந்தால் என்ன செய்யவேண்டும், எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், பத்தியச் சமையல் எப்படி சமைக்க வேண்டும் என்பதையெல்லாம் மறந்துவிட்டிருக்கின்றனர்.

♥குழந்தைக்கு என்ன ஆகாரம் தருவது, அழுதால் அதற்குக் காரணம் என்ன, கை வைத்தியமாக என்ன செய்யலாம், எப்படிக் குளிப்பாட்டுவது என்பதில் எல்லாம் குழப்பம். அத்துடன் மருத்துவமனைகளில் டாக்டர்களும் திருமணம்கூட ஆகாத செவிலியர்களும் கூறும் யோசனைகளைத்தான் பெரும்பாலும் கேட்க வேண்டியிருக்கிறது.

♥இப்போதெல்லாம் பிரசவ வலி வந்த உடனேயோ அல்லது டாக்டர்கள் குறித்த நாளிலேயோ மருத்துவமனையில் சேர்த்துவிடுகின்றனர். சில மருத்துவமனைகளில் பிரசவ வேதனையே வேண்டாம் என்ற நோக்கில் அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையை  "எக்ஸ்பிரஸ் டெலிவரி' செய்துவிடுகின்றனர்.
""சிசேரியன் கூடாதுதான், இடுப்பு வலி தாங்கவில்லை, பெண்ணுக்கு உடம்பில் சக்தியில்லை எனவே சம்மதித்துவிட்டோம்'' என்று பெண்ணைப் பெற்றவர்களே இயலாமையை ஒப்புக்கொள்கின்றனர்.

♥இடுப்புவலி என்பது தாங்க முடியாததுதான். அதனால்தான் அந்தக் காலத்தில், ""அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்'' என்று சொன்னார்கள். இடுப்புவலியின்போது தாயாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் கூடுகிறது. குழந்தைக்கும் அது நோய் எதிர்ப்புச் சக்தியை ஊட்டுகிறது. இது இயற்கை தந்த வரம்.

♥அதே நேரம், கர்ப்பிணி இள மாதமாக இருக்கும்போது போதிய ஓய்வு கொடுத்து சில காலம் கழித்து குனிந்து நிமிர்ந்து நிறைய வேலையையும் செய்யச் சொன்னார்கள். சுகப்பிரசவத்துக்கு அதெல்லாம் உதவின.
சமீபத்தில் ஒரு சம்பவம். சிசேரியனில் பிறந்த குழந்தை பூஞ்சையாக இருந்ததால் இன்குபேட்டரில் வைத்தார்கள். ஆனால் சிசு ஓயாமல் அழுதுகொண்டே இருந்தது. 

♥வலியையும் பொருள்படுத்தாமல் குழந்தைக்கு அந்தத் தாய் பால் கொடுத்தாள். அப்போதும் அழுகை ஓயவில்லை. என்ன செய்வது என்று எல்லோரும் திகைத்திருக்க குழந்தையைத் தன்னுடைய இடது மார்போடு அணைத்தபடி பக்கத்தில் படுக்கவிட்டாள் அந்த இளம்தாய். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு தூங்கியது. ஆம், கர்ப்பத்தில் இருக்கும்போது கேட்ட தாயின் இதய ஒலி கேட்டதும் அதற்கு பயம் நீங்கி பத்திர உணர்ச்சி ஏற்பட்டு அழுகையை நிறுத்தியது.

♥பிறந்த குழந்தையை 3 மாதங்கள்வரையில் இப்படித்தான் தாய் தன்னோடு அணைத்துக்கொண்டு தூங்கவேண்டும். பெரும்பாலான குழந்தைகள் நாம் பேசுகிற சப்தத்தைக் கேட்டுக்கொண்டே பகலில் தூங்கும். இரவில் நாம் தூங்கும்போது சப்தம் கேட்காததால் அழும். அதை ஒரு இம்சையாகக் கருதுவோர் பலர். இதை நிறுத்தவும் அதே வழிதான். தாய் தன்னுடன் சேர்த்து குழந்தையை அணைத்தபடி படுத்துக்கொள்ள வேண்டும்.

♥குழந்தையைப் படுக்கையிலிருந்து தூக்கும்பொழுது நம் இரண்டு முழங்கைகளும் குழந்தையின் கால் பாகத்திலும், முன்னங்கைகள் இரண்டும் குழந்தையின் தலையினை இரண்டு பக்கமும் அணைத்து சேர்த்தவாறு தூக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் கழுத்துப் பகுதியில் உள்ள மெலிதான எலும்புகளுக்கு அதிக அளவுக்கு அசைவுகள் இல்லாமல் தூக்க முடியும். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாற்றும்போதும் குழந்தையை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். உரம் விழுகிறார்போல செய்துவிடக்கூடாது. குழந்தை நன்கு வளர்ச்சி அடைகிறவரை மற்றவர்கள் அதிகம் தூக்காமல் இருப்பது மிகமிக நல்லது.

♥வெளியிலிருந்து வந்தவர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளாமல் குழந்தையையும் தாயையும் நெருங்காமல் இருக்க வேண்டும். இது குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் காக்கும்.
குழந்தையை நாம் தூக்கி வைத்திருக்கும்போதோ மடியில் படுக்க வைத்திருக்கும்போதோ சிறுநீர் கழித்தால் புடவை, வேட்டி நனைந்துவிடுமே என்ற அச்சத்தில் உடனே சடாரென்று  குழந்தையைத் தூக்கி யாரிடமாவது கொடுக்க முயற்சிக்கக் கூடாது. 

♥அப்படிச் செய்தால் அதிர்வுகளால் குழந்தை சிறுநீர் கழிப்பதை பாதியில் நிறுத்திவிடும். அது குழந்தைக்கு வலியை ஏற்படுத்தும். நாளடைவில் குழந்தைக்குச் சிறுநீரகத்தில் கல் ஏற்படவும் வழிவகுத்துவிடும்.
குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரையில் நாப்கின்களைப் பயன்படுத்தக்கூடாது. பெண் குழந்தை என்றால் வெகுசீக்கிரத்திலேயே அதற்கு நாப்கின்களை அணிவிக்கிறார்கள். இது மிகமிகத் தவறு. பருத்தியாலான தூய்மையான வெள்ளைத் துணிகளை குழந்தையின் இடையில் சுற்றி வைக்க வேண்டும். ஈரமானவுடன் அந்தத் துணிகளை மாற்ற வேண்டும். துவைக்கும்போது கிருமிநாசினி கலந்து துவைக்கலாம். 

♥இள வெயிலில்தான் உலர்த்த வேண்டும். துணியில் எறும்பு போன்றவை இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்த பிறகே பயன்படுத்தவேண்டும். அவசரப்படக்கூடாது.
குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் தாயார் பத்தியமாக இருக்க வேண்டும். அதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் பூண்டு, மிளகு, சீரகம், திப்பிலி போன்றவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
கர்ப்பிணியாக இருக்கும்போதும் குழந்தை பிறந்தவுடனேயும் தாய்க்கு நல்ல போஷாக்குள்ள உணவை அளிக்க வேண்டும். மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

♥குழந்தை பிறந்த வீட்டில் தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு சாதனங்களை அதிக ஒலி வைத்துக் கேட்கக்கூடாது. குழந்தை இருக்கும் அறையில் தொலைக்காட்சி இல்லாமல் இருந்தால் மிகமிக நல்லது. குழந்தைக்கு நாம் நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்றால் நாம் பேசுவதை அது கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். குழந்தை என்பது தேவலோகத்திலிருந்து வந்த தூதுவன். அந்தவீடு மகிழ்ச்சியாக அதே சமயம் அமைதியாக, தூய்மையாக இருக்கவேண்டும்.
 
♥குழந்தை இருக்கும் அறையில் இயற்கையான வெளிச்சமும் காற்றோட்டமும் அவசியம். மிதமான சூரிய வெளிச்சம் அறையில் வருவது நல்லது.
 குழந்தையை கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

♥இரவில் "ஜீரோ வாட்' விளக்கு எரிந்துகொண்டிருக்க வேண்டும். குழந்தை இருக்கும் அறையில் வியாதியஸ்தர்களைப் படுக்க வைக்கக்கூடாது. குழந்தைக்கு உணவு தரும் பாத்திரங்களை தினமும் சுத்தமாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். 

♥குழந்தையின் மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும். குழந்தையிடமிருந்து லேசாக முக்கல் முனகல் ஒலி வந்தாலும் அதுகேட்கும் வகையில் அந்த இடம் நிசப்தமாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றையும்விட முக்கியம் குழந்தைக்குத் தமிழில் தாலாட்டுப் பாடல்களைப் பாட வேண்டும். தாய்ப் பாலோடு தமிழையும் சேர்த்து ஊட்டி வளர்ப்போம்.

Post a Comment

0 Comments