🙏🌺#மனைவியே 🌺🙏
மன்னிக்க வேண்டுகிறேன்
***************************
தவிர்க்க இயலாத
தருணங்களில்
வன்சொல்லின்
வசைபாடியிருக்கிறேன்
யார் மீதோ உள்ள
கோபங்களையெல்லாம்
உன் மீது வம்படியாய்
திணித்திருக்கிறேன்
உன் வீட்டாரைப்பற்றி
பேசும் போதெல்லாம்
புறக்கணித்திருக்கிறேன்
உன் ஆகச்சிறந்த
அறிவுரையெல்லாம்
ஆகவழித்தனமென்று
மெத்தனமாய்
உன்னை கடிந்திருக்கிறேன்
உன்னை ஒரு பொருட்டாகவும்
சகமனுசியாகவும் எண்ணாமல்
எத்தனையோ முறை
எள்ளி நகையாடியிருக்கிறேன்
உன் சிறு குறைகளையெல்லாம்
பெரும் குற்றமென
மனசாட்சியின்றி உன்மீது
பழிசுமத்தியிருக்கிறேன்
இதயமற்று துளியளவும்
சலனமே இல்லாமல்
கூனிகுருகும்படி
உன்னை வார்த்தைகளால்
தண்டித்திருக்கிறேன்
இவையணைத்தையும்
துணைவன் என்ற
ஓரே ஒரு காரணத்தினால்
பொறுத்துக்கொண்டே
இருந்திருக்கிறாய்
என்பது தான் நிதர்சனம்
உன்னிடம் மன்றாடினாலும்
உன் காலடியில் விழுந்து
தொழுதாலும்
உனக்கிழைத்த
கொடுமைகளுக்கும்
பாவத்திற்கும்
எனக்கு மன்னிப்பே கிடையாது
இருந்த போதும் ஓர் நீள் இரவில்
வேலை பளுவின் மிகுதியில்
அசதியாய் கண்ணுரங்கையில்
தன்னிலை மறந்து
துயிலும் மழலையை
கையில் அள்ளி மாரோடுசேர்த்து
அணைத்துக்கொண்டு
உறங்க வைப்பதுபோல்
உன் பாதங்களை
பற்றிக்கொண்டு
நெஞ்சில் சாய்த்தவாறு
உன்னிடம் மன்னிப்பு
ஒன்றை கோருகிறேன்
மறந்தும் மன்னித்து விடாதே
நான் மன்னிப்பு பெறுவதற்கு
தகுதியற்றவன்...
முடிந்தால் என்னை
தண்டித்து விடு...
அதுவே உன்னிடமிருந்து பெரும்
மன்னிப்பாக கருதுவேன்.!
0 Comments
Thank you