♥அப்பா மகள்
♥அம்மா எவ்ளோ திட்டினாலும்
இந்த மனசு அத லேசா எடுத்துக்கும்..
அப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டாருனா
அவ்ளோ தான்.. மனசுல பாரம் நிரம்பி போகும்...கண்ணுல கண்ணீர் தேங்கி போகும்...இது தான் அப்பாக்களுக்கே உரிய சிறப்பு !
♥உனக்கு இது செஞ்சேன் அது செஞ்சேன்..
உன்ன இப்படி வளர்த்தேன்.. அப்படி வளர்த்தேன்.. என்று அம்மா அடிக்கடி கூறும் போது.கலங்காத நம்ம மனசு...அப்பா ஒரே ஒரு தடவ கண்கள் சுருக்கி நம்மள பாத்துட்டார்னா.. அதுல தான் எவ்ளோ அர்த்தம்.. கரைஞ்சு போகுது இந்த மனசு..
♥அவ்ளோ ருசியா சமைச்சு போடுவா அம்மா.. நம்மள ரசிச்சு ரசிச்சு கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவா அம்மா..
ஒரே ஒரு முறை தலையை வருடி செல்லும் அப்பாவின் கைக்கும் மட்டும் ஒரு மகிமை..
அந்த ஒரு வருடலில் காணாமல் போகும் வலி..
♥எதுவும் சொல்லவே மாட்டார்..
சில நேரம் கத்தவும் செய்வார்..
புகழ்ந்து பேச காசு கேப்பாரு..
நாம இல்லாத போது
என் மகளுக்கு ஈடு இணை ஏது..
என் மகனுக்கு ஈடு இணை எது..
என்று பெருமை பேசும் அப்பாவின் முன்னே
பறந்தே போகுது இந்த செல்ல கோபங்கள்..
♥நமக்கு அழகழகாய் ஆடை அணிய செய்து
அழகு பார்க்கும் அப்பாக்கள்..
தனக்கென்ன விலை உயர்ந்த ஆடைகளை எடுப்பதே இல்லை..
அதே சமயம் நாம் ஆசையாக வாங்கி கொடுத்தால்..
அவரின் முகத்தில் வந்து விடும்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
பிள்ளைகளின் பரிசை பொக்கிஷமாக
பாதுகாக்கும் அப்பாக்கள்..
♥பூமியில் பிறந்த அனைவருக்கும்
இதயத்தை படைத்த இறைவன்..
அப்பாக்களுக்கு மட்டும் கனவுகள் படைத்தான்..
அதில் தன் பிள்ளைகளின்
எதிர்காலத்தை மட்டுமே
அழுத்தமாய் பதித்தான்..
♥அப்பாவின் விழியோரம் நீர்த்துளிகள்..
பிள்ளைகளுக்காவே..
ஆனந்த கண்ணீராக..
♥காலங்கள் ஓடி விடும்..
வருடங்கள் ஓடி விடும்..
பிஞ்சு விரல் பிடித்து..
தோள் மீது நம்மை சுமந்து..
தன் காயங்கள் மறைத்து..
நம் முன்னே என்றும் சிரித்து..
நம் வளர்ச்சியை பார்த்து பார்த்து
நிறைவு கொள்ளும் அப்பாக்களின்
அன்பு மட்டும் என்றென்றும் மாறுவதில்லை..
0 Comments
Thank you