♥அனைத்து தாய்க்கும் சமர்ப்பணம்..
♥நான் பேசும்முன்பே என் தேவையரிந்தாய்....
உடையணித்து, நடைபழக்கி, உன்வயதை நீ குறைத்து, என்வயதை கூட்டிச்சென்றாய்..
♥மழைக்காற்றும், வெயில்பணியும், மங்காதக்கதிரவனும், மின்னல் கொண்ட இடியவனும் உனைக்கண்டு பயந்து போன நாளதனை மறக்கவில்லை...
♥முதன்முதலில் கைபிடித்து எழுத வைத்த உன்விரலை மறந்துவிட்டு, தேர்ச்சி கொண்டேன் என்ற பெருமிதத்தை உன்னிடமா சொல்லிவந்தேனே....
♥வகுப்பறையில் நடந்தவற்றை நான் கூற, என்னோடு நீயும் வந்தாய் உன்னினைவில் வகுப்பறைக்கே..
♥உனக்காக என்ன வேண்டும் எடுத்து கொள் என் தாயே..
♥உதிரத்தில் உயிர்கலந்து, உருவம் தந்து, நடைமாட விட்டாயே..
உனக்காக என்ன வேண்டும்..
எனக்கு தெரியும் எதையும் நீ கேட்க மாட்டாய்.. கொடுத்தாலும் வாங்க மாட்டாய்.. உன்தேவை நானறிந்து உனைக்காப்பேன் என் சேயாய்...
0 Comments
Thank you